17/08/2018

இந்திய சதி கோட்பாடு -2...


இந்திய ராணுவத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையான அக்னி 5-ன் தாக்குதல் எல்லை பற்றியது...

அதாவது, அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் தூரம் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது பின் அது 5500 - 5800 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது என்று இந்திய அரசாங்கம் கூறியது.

ஆனால், 17000 கிலோ எடை கொண்ட அக்னி 4 ஏவுகணையானதே சுமார் 4000கிமீ தூரம் வரை சென்று தாக்கும் போது, அக்னி 5 அதைவிட அதிகமான தூரத்தை கடக்கும் என்கிறார்கள் சில சதி கோட்பாட்டாளர்கள்.

சதி கோட்பாட்டாளர்களின் கணிப்பு படி, அக்னி 5 ஏவுகணையானது சுமார் 50000 கிலோ எடையும், 8000 கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், எதிரிகளை கலங்கடிக்கவே (முக்கியமாக சீனாவை) அக்னி 5-ன் தாக்குதல் எல்லை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் சதி கோட்பாட்டாளர்கள் கருத்து கூறுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.