‘நிபா’ வைரஸ் பாதிப்பையடுத்து கேரளாவில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்து உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவியது. இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரியவந்தது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது அங்கு வைரஸ் தாக்கம் குறைந்து உள்ளது என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிபா வைரஸ் தொற்று எற்பட்டதுமே பாதிப்பை தொடங்கி விடுகிறது, 14 நாட்களில் ஒருவருடைய உயிரை குடிக்கும் வைரசாக உள்ளது. 10-12 நாட்கள் வரையில் பாதிப்பாக நகரும் வைரஸ் அதற்கு பின்னர் உயிரை எடுக்கிறது. வைரஸ் மூளையின் நரம்பை பாதிக்க செய்து, வீக்கம் அடைய செய்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. மூச்சுவிட முடியாமை, குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பழம் திண்ணி வவ்வால்கள், பறக்கும் நரிகள் மூலமாகதான் நிபா வைரஸ் பரவி வருகிறது. அவைகளிடம் இருந்து வைரஸ் பிற உயிரினங்களுக்கு பரவுகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியா கேரளாவில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு தடையை விதித்து உள்ளது, நிபா வைரஸ் அச்சம் காரணமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. மே 29-ம் தேதி ஐக்கிய அரபு எமிரெட்ஸ் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தது.
கேரளாவில் இருந்து 100 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை ஏற்கனவே ரத்து செய்துவிட்டது. இதற்கிடையே நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கும் மருந்துக்களுடன் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் சுகாதார அமைப்பு விபிஎஸ் ஹெல்த்கேர் விமானம் ஒன்றை கேரளாவிற்கு அனுப்பியது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.