கிழக்கு தெருவில் திருடனை பார்த்து நாய் குறைக்கும்..
அதை கேட்ட தெற்கு தெரு நாய் தானும் திருடனை பார்த்ததுபோல் பெரிதாய் காட்டிக் கொண்டு குறைக்கும்.
இதனை அடுத்து ஊர் முழுவதும் நாய் குறைப்பு சத்தம் கேட்கும்.
உண்மையில் திருடனை பார்த்தது ஒரே நாய்தான். அதேபோல் உண்மையில் கடவுளை உணர்ந்தவன் மூலைக்கு ஒருவன்தான் இருக்கிறான்.
எனவே அடுத்தவன் கூறுவதை நாம் ஏன் உண்மை என எடுத்து கொள்ள வேண்டும்.
சிவம் பலவானாலும் ஒவ்வொன்றிற்கும் அறிவு உண்டு.
நீங்களாக உணர முயற்ச்சியுங்கள், புராணங்களை படியுங்கள். ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
என் கருத்துக்களை கூட நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
எப்போது உங்களுக்குள் ஏன்? எப்படி? எதனால்? என்பது போன்ற கேள்விகள் எழுப்புகிறதோ அப்போதே நீங்கள் அடுத்த படிக்கு உயரத் துவங்குகிறீர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.