28/08/2020

காவிரிக் கலவரத்தை தட்டிக்கேட்ட அண்ணன் வீரப்பனார்...



1991 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி.

வீரப்பனார் தமது தம்பி அர்ச்சுணனிடம் காவிரியைக் கடக்க பரிசல் ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தார்.

இரண்டு நாட்களாகியும் அர்ச்சுணன் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை.

வீரப்பன் தமது தம்பியிடம் இது பற்றி விசாரித்தார்.

அர்ச்சுணன் தயங்கித் தயங்கிக் கூறினார்.

அண்ணே காவிரியை தமிழ்நாட்டுக்குத் தெறந்துவிட கர்நாடகா மறுத்துட்டதாம்.

கர்நாடகாவுல இருக்குற தமிழ்க் கிராமத்துலல்லாம் ஒரே கலவரமாம்.

நம்ம  மக்களோட சொத்துபத்த கொள்ள அடிச்சுட்டு விரட்டுதானுவ.
அதான் பரிசலுக்குத் தட்டுப்பாடு.

வீரப்பன் குதித்தெழுந்தார்..

மடையா இத ஏன் நீ மொதல்லயே சொல்லல? என்று கடிந்து கொண்டே விருட்டென்று தன் துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டார் அவருடன் இருந்த தளபதிகள் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டனர்.

அப்போது அர்ச்சுணன் அண்ணே அண்ணிக்கு பிரசவமாகுற நேரம்.
நீங்க இங்க இருக்குறது ரொம்ப முக்கியம்.

சேதி தெரிஞ்சா நீ புறப்புட்டுருவனு தான் சொல்லாம இருந்தேன் என்றார்.

அதற்கு வீரப்பன் சரி நீ இங்கயே இரு. மத்தவங்க என்னோட வாங்க என்று கூறிக்கொண்டே வேகமாக ஆற்றங்கரைக்கு ஓடினார்.

அவரது தளபதிகளும் பின்தொடர்ந்து ஓடினர்.

ஆற்றங்கரைக்கு வீரப்பன் வந்ததும் எதிரில் தமிழ் மக்கள் தமது வீடு நிலமெல்லாம் விட்டுவிட்டு கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டு பரிசலில் கண்ணீர் சிந்திய முகத்தோடு கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

அங்கு ஓடோடிச் சென்ற வீரப்பன் அவர்களிடம் என்ன இது? எப்படி ஆச்சு? என்று வினவினார்.

அந்த மக்கள் காவிரில தண்ணி தெறந்து விடனும் கேட்டதுக்கு. நம்ம பங்கு தண்ணீரையும் குடுக்காம இந்தக் கன்னடனுங்க, இங்க காலங்காலமா வாழுற எங்கள எல்லாத்தையும் புடுங்கிட்டு வெரட்டுறானுவ.

தட்டிக் கேக்க யாருமில்ல என்றார் ஒருவர்.

இன்னொருவர் கன்னட வனத்துறையும் போலீசும் இதுக்கு உடந்தை.

பெங்களூர்ல கலவரம் நடந்து நம்ம மக்கள கொன்னுட்டானுவ.

மஞ்சள் கயிறு தாலிய வச்சு அடையாளம் கண்டுபிடிக்கிறானுக.

அடி, உதை, கொள்ளை தான்.

காலங்காலமா இதுதான் நடக்குது என்றார் இன்னொரு தமிழர்.

வீரப்பன் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார்...

யார் இத தூண்டிவிடுறது? என்று மீசையை முறுக்கியபடி கேட்டார்..

ஒரு கட்சியா ஒரு டிபார்ட்மென்டா எல்லாரும் சேந்துதான் செய்றானுவ.

மத்த மாநிலத்தோடயும் தண்ணி பிரச்சன இருக்கு.

ஆனா, தமிழன்னா மட்டும் அடிக்கிறானுக. கேக்க நாதியில்ல பாரு.

இதுல மட்டும் ஒத்துமையா இருக்கானுக என்றார் ஒரு தமிழர்.

ஏன் இல்லை இந்த வீரப்பன் இருக்கான் என்று உறுமியபடி பரிசலில் ஏறி தமது தளபதிகளுடன் அக்கரைக்குப் போனார்.

அக்கரையில் தமிழரை விரட்டி அவர்கள் வெளியேறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கன்னடவர், ஆற்றங்கரையில் 20, 25 பேர் வீரப்பன் தலைமையில் கண்களில் கொலை வெறியுடன் பரிசலில் இருந்து துப்பாக்கிகளைப் பிடித்தபடி இறங்குவதைப் பார்தததுதான் தாமதம், காலியான அந்த தமிழ்ச் சிற்றூரில் வீடுகளுக்குள் கன்னடர்கள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.

மற்றவர் தலைதெறிக்க ஓடினர்.

தமிழர் வெளியேறக் கெடுவிதித்த கர்நாடக வனத்துறை காணாமல் போய்விட்டிருந்தது.

ஊருக்குள் நுழைந்த வீரப்பனார்
எவன்டா தமிழன் மேல கைய வெச்சது.

ஆம்பளனா வெளிய வாங்கடா பாப்போம்.

தமிழனுக்கு யாருமில்லனு நெனச்சீங்களா?

இனிமே ஒரு தமிழனத் தொட்டீங்க தொலச்சிருவேன். என்று முழங்கியபடி தமது ஆட்களை வீதிகளில் தேடச் சொன்னார்.

அப்போது அங்கே சில கன்னடர் வர அவர்கள் வீரப்பனிடம் கொண்டு வரப்பட்டனர்.

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்டா?என்று வீரப்பன் மீசையை முறுக்க..

வீரப்பனைப் பார்த்து நடுநடுங்கிய அவர்கள்..

ஐயா, நாங்க ஒண்ணும் பண்ணல தமிழர் எங்க கூடப் பிறந்தவங்க மாதிரி என்று குழறியபடி சொன்னார்கள்.

ஊருக்கெல்லாம் சொல்லுங்க..

இந்த வீரப்பன் இருக்குற வர எவனாவது எங்க மக்களத் தொட்டீங்க தொலஞ்சீங்க என்று எச்சரித்து விட்டு அந்த சிற்றூரிலிருந்து பரிசல் ஏறி மறுகரைக்கு வந்தார்..

ஆற்றங்கரையில் நின்ற அர்ச்சுணன்.. அண்ணே உங்களுக்கு ரெண்டாவது பெண்கொழந்த பிறந்திருக்குவஎன்று கூறினார்.

அதன் பிறகு அவர் தம் மனைவியை பார்க்கக் காட்டுக்குள் சென்றார்.

இது சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான்  காவிரிப் பிரச்சனை  தீவிரமடைந்திருந்தது.

அப்போதே வீரப்பனாருக்குத் தெரிந்திருந்தால் கன்னடவருக்குத் தக்கப் பாடம் புகட்டியிருப்பார்.

ஆனால், தமிழர் அனைவரும் கிட்டத்தட்ட வெளியேறிய பிறகே வீரப்பனாருக்கு அது தெரியவந்தது.

தவிரவும் வீரப்பனார் அப்போது தமிழ்ப் போராளியாக மாறியிருக்கவும் இல்லை..

ஒரு கடத்தல்காரனாகத் தான் இருந்தார்..

ஆனாலும் தமது இனத்தின் மேலிருந்த பற்றினால் தமது மனைவி அடர்ந்த காட்டில் பிள்ளைபேறு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதும் தமது மக்களைக் காக்கப் பாய்ந்தோடினார்.

வீரப்பனார் தமிழருக்காக முதன் முதலில் வெளிப்படையாகக் குரல் கொடுத்த நிகழ்வு இதுவே ஆகும்...

தற்போது வீரப்பனார் இல்லை.. ஆகையால் காவிரி பிரச்சனை மீண்டும் வந்தது.. இதற்கும் இந்த திருட்டு திராவிட சதி தான் காரணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.