வாழ்வில் நடப்பனவற்றைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டே இருந்து விடுதல், அவற்றோடு பழகிப் போய்விடுதல், சூழ்நிலையில் நிகழும் நிகழ்ச்சிகள் மீது பழி போடுதல் - இத்தகைய மனோபாவங்களுடன் தான் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.
உள்ளபடி, உள்ள நிலையிலிருந்து நாம் ஏன் தப்பி ஓடுகிறோம்?
எடுத்துக் காட்டாக : நாம் சாவைக் கண்டு அஞ்சுகிறோம். சாவுக்குப் பின் நமக்கு நேரிட இருக்கும் நிலையினைப் பலவிதமான கருத்துக்கள், நம்பிக்கைகள், கொள்கைகள் இவற்றினை உருவாக்கி, அவற்றின் மூலம் சாவு என்ற உண்மையை உள்ளது உள்ளபடி காண இயலாதவாறு மறைத்து விடுகிறோம்.
என்ன செய்தால் என்ன? சாவை நம்மால் தவிர்க்க முடியாது. அது நம்மை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.
எதனையும் உள்ளது உள்ளபடி உணர்வதற்கு அதன் முன் நின்று கண் கொண்டு நோக்க வேண்டுமேயன்றி அதற்கு முதுகு காட்டி ஓடுவதில் பயனில்லை.
நம்மில் பெரும்பாலோனோர் வாழவும் அஞ்சுகிறோம், சாகவும் அஞ்சுகிறோம். நம் குடும்பம் என்ன ஆகுமோ என்ற அச்சம், நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அச்சம், நமது வேலை போய்விடுமோ என்ற அச்சம், இது போன்ற நூற்றுக் கணக்கான அச்சங்கள்.
அஞ்சுகின்ற மன நிலையில் தான் நாம் இருக்கிறோம். உண்மையை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடிவதில்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.