தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நேரத்தை இரவு 12 மணி வரை நீட்டிக்க காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மத்திய மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மத்திய மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக மார்ச் 2020ல் வணிகம் முடக்கப்பட்டு, பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் வணிகர்களுக்கு பெரும் வணிக இழப்பையும், வாழ்வாதாரச் சிதைவும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் வணிகர்களின் பண்டிகை கால சலுகைகளாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை எதிர்நோக்கி இருக்கும் காலகட்டத்தில், குறிப்பாக பட்டாசுக் கடைகள், ஜவுளிக்கடைகள், இனிப்பகங்கள் இயங்கும் கால நேரத்தை இரவு 12 வரை நீட்டித்து, விழாக்களின் முன்தினம் மட்டும் இரவு முழுவதும் வர்த்தகம் செய்திடவும் காவல் துணை கண்காணிப்பாளர் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன்,பொருளாளர் ஆனந்த பொன்ராஜ் ,மாநிலத் துணைத் தலைவர் வெற்றி ராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.