பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை...
நான் ஒரு தமிழன்.
எனது தாய்மொழி தமிழ்.
தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை.
அதே போல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.
அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.
ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.
தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும், வந்து போகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
கடந்த தேர்தலின் போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்து போகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?
தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.
தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.
தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள். எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்.
இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.
அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.
இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல் கொடுத்த தூய தமிழன் தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.
அதேபோல "இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டியது தானே?" என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள் தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.