19/07/2017

சுதந்திர தேவியும் நகரத்தார் கண்ணகியும்...


கண்ணகி :

சிலப்பதிகாரம்...

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்
                                     

சிலப்பதிகாரப் பதிகத்தின் முதல் பாடலில் கண்ணகியினைக் குறிப்பிடும் புலவர் இவ்வாறு கூறுகிறார்:

பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாள் திருமா பத்தினி...

இதன் மூலம் நாம் அறிவது மதுரையை எரித்தபின்பு கண்ணகிக்கு இடதுமுலை இல்லை இது ஒரு உருவக கதை என்றாலும் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்..

கண்ணகி ஒரு வணிகனின் மகள் கோவளன் ஒரு வணிகனின் மகன்
மகள் மணிமேகலை என்ற பெயர் ஒரு கடல்வணிக கடவுளின் பெயர்..

சுதந்திர தேவி சிலை :

Auguste Bartholdi என்ற Freemasonல் உருவாக்கப்பட்டு france நாட்டால் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட சிலை தான் இந்த சுதந்திர தேவி சிலை. அது அமெரிக்காவுக்கு கடல்வழியாக வருபவர்களை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால்...

இந்த சுதந்திர தேவி சிலைக்கும் கடந்த 30 ஆண்டுகள் முன்புவரை இடதுமுலை இல்லை..

30 வருடங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக அந்த சிலையில் ஒரு ரெடிமேட் முலையை சரிசெய்து ஒட்ட வைத்தார்கள்.

கையில் தீயுடன் காட்சி தரும் அந்த சுதந்திர தேவி வேறுயாரும் இல்லை கண்ணகி தான்...

கண்ணகி என்ற கதை  என்பது உண்மையா இல்லையா என்பதை கடந்து அது ஒரு தத்துவமாக இருந்திருக்கிறது என்பது அனைவரும் ஏற்றுகொண்டதே...

இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்..

சிலருக்கு.புரியவில்லை எனில் அடுத்து சூயஸ்கால்வாயும் நகரத்தார் தொடர்பும் என்ற அடுத்த பதிவில் விளக்குகிறேன்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.