நியூயார்க் நகரத்தில் பறக்கும் தட்டு ஒன்று வட்டமிட்டதை ஹாலிவுட் நடிகை ரோவன் பிளன்சார்ட் படம் பிடித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ரோவன் பிளன்சார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தினை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரத்தில் வட்டமடிப்பது போன்று உள்ளது.
இந்த புகைப்படத்தை பார்வையிட்ட பறக்கும் தட்டு ஆர்வலர்கள் பலர் இது 90 சதவிகிதம் உண்மையான பறக்கும் தட்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது நடிகை ரோவன் பிளன்சார்ட் -ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்திற்கு 1,11,000 பேர் விருப்பமும், 1,665 பேர் கருத்துகளும் தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படமானது நியூயார்க் நகரின் பெரும்பாலான பகுதிகள் ஒளி வெள்ளத்தில் மிதப்பதையும், சூரியன் மறைந்து வரும் வெளிச்சத்தில் இடையே வானத்தில் பறக்கும் தட்டு தோன்றுவதையும் தெளிவாக பதிவு செய்துள்ளது.
ஆனால் சிலர் இந்த புகைப்படத்தை ஜன்னலின் பிம்பம் எனவும் இது பறக்கும் தட்டு அல்ல எனவும் கூறி உள்ளனர்.
சில ஆர்வலர்கள் இதேப்போன்ற பறக்கும் தட்டு ஒன்றை ஏற்கனவே பார்த்துள்ளதாகவும், மீண்டும் அந்த வாய்ப்பு இந்த புகைப்படம் வாயிலாக தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் சூரியன் மறைந்த பின்னர் வானத்தை கூர்ந்து கவனித்தால் இதுபோன்று வட்டமிடும் பறக்கும் தட்டுகளை நாம் காணலாம் என சிலர் தெரிவிக்கின்றனர்.
அழகான சூரிய அஸ்தமனத்தை படம் பிடித்த நடிகையின் புகைப்படத்தில் தற்செயலாக பறக்கும் தட்டும் சிக்கியுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி வேற்றுகிரகவாசிகளுக்கு நியூயார்க் நகரம் எப்போதும் வியப்பளிக்கும் ஒரு விஷயமாக இருந்து வருவது இந்த புகைப்படம் ஒரு சான்று எனவும் கூறுகின்றனர்.
இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் சிலரும் எம்பையர் கட்டிடத்தின் அருகாமையில் இதுபோன்று பறக்கும் தட்டு வட்டமிட்டுள்ளதை படம் பிடித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.