அந்தரத்தில் சுழன்றுக் கொண்டிருக்கும் பூமியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
27 நட்சத்திர கூட்டங்களும் 9 கிரகங்களும் நம் பூமியின் மீது வலுவான தாக்கத்தை உண்டுபண்ணி கொண்டே இருக்கிறது.
குதிரை முக வடிவில் அமைந்திருக்கும் நட்சத்திர தொகுப்பிற்கு அஸ்வினி என பெயர் வைத்தான். அஸ்வினி என்றால் குதிரை.
இது போல் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றோடு உருவகப்படுத்தி பெயர் வைத்தான்.
வாரத்தின் 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்.
இராகு கேது மட்டும் 7 நாட்களும் தனது ஆதிகத்தை குறிப்பிட்ட நேரங்களில் செலுத்தும். அதுவே இராகு காலம் எமகண்டம் ஆகும்.
ஒவ்வொரு குழந்தை பிறக்கும் அந்த கனம் அந்த இடத்தின் சூழல் மற்றும் அதிர்வுகளுக்கு ஏற்ப அதன் உடலும் மனமும் உயிர்பிழைக்க டியூன் ஆகிவிடுகிறது.
அதுவரை அந்த குழந்தை அழும். சூழல் பழக்கப்பட்டவுடன் அதன் அழுகை நின்று விடுகிறது.
அந்த சூழல் அப்படியே மாறாமல் இருந்தால் அந்த குழந்தை மரணத்தை எப்பொழுதுமே தழுவாது. ஆனால் பிரபஞ்சத்தின் கோட்பாட்டில் அதற்கு இடமில்லை.
கிரகங்களின் சுழற்சியால் அந்த குழந்தையின் உடல் மற்றும் மனம் பல்வேறு அதிர்வுகளால் பாதிக்கப்படுகிறது.
அமாவாசையில் பிறக்கும் குழந்தை நிலவின் அதிர்வலைகளுக்கு பழகி இருக்காததால் பௌர்ணமி அன்று ஏற்படும் அதீத அதிர்வுகள் அக்குழந்தையை பெரிதும் பாதிக்கின்றன.
இதுபோல் நீங்கள் பிறக்கும் போது எந்த கிரக கதிர்கள் உங்களுக்கு சரிவர கிடைக்காமல் நீசம் அடைந்துள்ளதோ அந்த கிரகங்களின் ஆதிக்க நாட்களில் உங்களுக்கு உச்சபட்ச பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த கிரக அதிர்வுகளால் உங்கள் உடலின் பஞ்சபூத தன்மையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை துல்லியமாக சுட்டிக் காட்டுவதே சோதிடம்.
பூமியின் அதிவேக சுழற்சியால் ஒவ்வொரு நொடியும் உங்கள் உடல் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டும் ஆன்மா மேல்நோக்கி தள்ளப்பட்டும் கொண்டே இருக்கிறது.
இந்த உயிரை தக்க வைக்க நம் மூச்சு 24/7 நேரமும் இயங்கி கொண்டே இருக்கிறது. இந்த உடல் மையத்தை அடைய விடாமல் சுவாசத்தை நன்றாக இழுத்து உள்நோக்கிய அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தால் இந்த உடல் காயகல்ப உடலாக மாறும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.