16/06/2018

காலிஃப்ளவரின் மருத்துவ நன்மைகள்...


காய்கறிகளில் காலிஃப்ளவர் பார்பதற்கு பூ வடிவத்தில் அழகாக இருக்கும். இது பார்பதற்கு அழகாக மட்டுமல்லாமல் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ள காய்கறியும் ஆகும் .இதில் வைட்டமின் சி, மெக்னீசியம் போன்ற சத்துக்கள்  உள்ளன. இன்று நாம் காலிஃப்ளவரில் உள்ள நன்மைகள் பற்றி காண்போம்...

காலிஃப்ளவர் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும் ஆற்றல் உடையது. இதில் உள்ள குளுக்கோசினோலேட் என்றழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் , உடலின் நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது .

காலிஃப்ளவர் தினமும் உணவில் சேர்த்து கொண்டால் பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் நம்மை நெருங்காது. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி (புண்) நீக்கும் காரணிகள் உள்ளதால் , இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றது.

இரத்த அழுத்தம் பிரச்சனை உடையவர்கள்  காலிஃப்ளவர் சாப்பிடுவது நல்லது. மேலும் இந்த காய்கறியில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளதால் , உடல் செயல்பாடுகளை சீராக வைத்துக் கொள்ள துணைபுரிகின்றது .

காலிஃப்ளவரில் குறைந்த அளவு கலோரிகள் தான் உள்ளது. அதனால் இதனை உணவுடன் சேர்த்து கொள்வதால் உடலில் கொழுப்பு தன்மை சேர்வதில்லை.

இந்த காய்கறியை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் உதவுகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.