பொன்னமராவதி அருகே கிணற்றில் விழுந்து போராடிய பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் இடையன்வயலில் வெள்ளத்துரை என்பவருக்கு சொந்தமான 40அடி விவசாய கிணறு உள்ளது. கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த வெள்ளத்துரையின் மாடு தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதனைக்கண்ட பாஸ்கர் என்பவர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மாட்டை உயிருடன் மீட்டனர்.விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.