கொசுக்களின் ஆண், பெண் இனச் சேர்க்கைக்குப் பிறகு பெண் கொசுக்களின் வயிற்றில் முட்டைகள் உருவாகின்றன. இம்முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மனிதர்கள் போன்ற பாலூட்டிகளின் ரத்தத்திலிருந்து கிடைப்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதனைக் கடிக்கின்றன.
மனிதரின் உடலின் வெப்பம், வியர்வை, உடல் வாசனை, மனிதர்களின் சுவாசத்திலிருந்து வெளியேறும் கரியமில வாயு, மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சில ஒளிக்கதிர்கள் போன்றவற்றைக் கொண்டே கொசுக்கள் மனிதரின் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன.
கொசுக்கள் சில மனிதர்களிடமிருந்து ரத்தத்தை உறிஞ்ச அதிக விருப்பம் கொள்கின்றன.ஆனால் சில மனிதர்களைப் புறக்கணித்து விடுகின்றன.
இது ஏன் என்பது இதுவரை விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. மனிதர்கள் உபயோகிக்கும் எண்ணெய், வாசனைத் திரவியங்கள், சவர்க்காரம் போன்றவையும் கொசுக்கள் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுக்கவோ, அல்லது நிராகரிக்கவோ காரணமாக அமையலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
இவை தவிர, கறுப்பு போன்ற அடர் நிறத்தில் உடை அணிந்தவரை விட வெள்ளை போன்ற வெளிர் நிறத்தில் உடை அணிந்தவரை கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள உண்மையாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.