09/03/2019

உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை...


இரசாயன ஆயுதங்கள் பிரயோகம் என்பது கி.மு. 400 ஆம் ஆண்டு முதல் பழமையானது.

கிமு 400ம் ஆண்டில் ஸ்பார்ட்டன் கிரேக்கப்படை எதிரிகள் மீது கந்தகப் புகையை பிரயோகம் செய்தது. சாவு விவரம் தெரியவில்லை.

கிபி 256: தற்போதைய சிரியாவில் குறிப்பிட்ட இந்த பண்டைய ஆண்டில் சசானிய பெர்சிய முடியாட்சி சுரங்கத்தில் பதுங்கியிருந்த ரோமானிய வீரர்கள் மீது விஷ புகையை பிரயோகித்துள்ளனர்.

1346: கிரிமியாவில் இத்தாலி வணிக குடியேற்றவாதிகள் மீது பிளேக் நோய் தொற்றிய பிணங்களை கொண்டு போடப்பட்டுள்ளது.

1500களில், ஸ்பானிய அராஜக காலனிய காலக்கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குடிமக்கள் மீது உயிரியல் போர் தொடுத்து லட்சக்கணக்கானோரை அழித்தது.

1763 ஆம் ஆண்டு போன்டியாக் போராளிகள் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் ராணுவ தலைமை ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட் அம்மை நோய் ஏற்படுத்தும் ஒரு வித ரசாயனம் தோய்க்கப்பட்ட போர்வைகளை அந்த நாட்டு உண்மையான குடிமக்களுக்கு வழங்க பரிந்துரை செய்தார். ஃபோர்ட் பிட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போது இந்த கொடூரமான போர்வை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1789ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவின் பூர்வ குடிகளை விரட்டியடிக்க அம்மை நோயை பிரிட்டிஷார் பரப்பியதாக கூறப்படுவதுண்டு.

1845ஆம் ஆண்டு நியூசீலாந்தில் மயோரி போராளிகளை அடக்க நச்சு வாயுவை பிரிட்டன் படைகள் பிரயோகம் செய்துள்ளனர்.

1907 ஆம் ஆண்டு ரசாயன ஆயுதங்கள் ஹேக் மாநாட்டில் தடை செய்யப்பட்ட போது அமெரிக்கா அதில் பங்கேற்கவில்லை.

1914 - 18: முதலாம் உலகப்போர் தொடங்கியது. ஒய்பிரஸ் போரில் ஜெர்மானியப்படை குளோரின் வாயுவை எதிரிகள் மீது பிரயோகம் செய்தது. இதில் 85,000 பேர் மரணமடைந்தனர். சுமார் 12 லட்சம் பேர் இனம் புரியாத நோயிலும், காயத்துடனும் வாழ்ந்தனர்.

1919 - 21: ரஷ்ய சிவில் யுத்தத்தில் புரட்சிகர போல்ஷேவிக் சோஷலிஸ்ட்கள் போராளிகள் மீது நச்சு வாயுவை பிரயோகித்தனர். ராயல் விமானப்படை போல்ஷேவிக்குகள் மீது இதே போன்ற தாக்குதலை நடத்தினர்.

1920: ஸ்பானியர்களின் மொராக்கோவில் பிரென்ச் மற்றும் ஸ்பெயின் படைகள் போராளிகள் மீது மஸ்டர்ட் வாயுவை பிரயோகம் செய்துள்ளனர்.

அதேபோல் இதே ஆண்டில் இராக்கின் அராபிய மற்றும் குர்திஷ் விடுதலை போராளிகள் மீது ரசாயன ஆயுதங்களை ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ள பிரிட்டன் அறிவுறுத்தியது. "நாகரிகமற்ற இனக்குழுகள்" மீது நச்சு வாயுவை செலுத்த பிரிட்டன் "அரசியல் மேதை" வின்ஸ்டன் சர்ச்சில் "பலமாக" பரிந்துரை செய்தார்.

1935: எத்தியோப்பியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கிய இத்தாலி மஸ்டர்ட் வாயுவை செலுத்தியது.

1937: சீனாவை ஆக்கிரமிக்க ஜப்பான் படைகள் உள் நுழைந்தது. சீனாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் ரசாயன ஆயுதங்களையும் பிற தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தியது.

1941: அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் தலையிட்டது. அதிபர் ரூஸ்வெல்ட் "நாங்கள் முதலில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம்" என்றார்.

1945ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் மீது வதை முகாமில் சைக்ளன் - பி என்ற ரசாயனப்புகையை செலுத்தினார். ஜப்பானிய ராணுவமும் இதனை பயன்படுத்தியது.

1947: அமெரிக்கா நோய் நுண்மம் அடங்கிய போர் ஆயுதங்களை வைத்திருந்தது. அதிபர் ட்ரூமன் ஜெனீவா உடன்படிக்கையிலிருந்து விலகினார்.

1949: அமெரிக்க நகரங்களில் ராணுவம் உயிரியல் ஆயுதங்களை ரகசியமாக பரிசோதனை செய்தது.

1951: அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவில் காளான் ஆயுதங்களைக் கொண்டு ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை கடுமையாக விரட்டி அடித்தனர்.

1952: ஜெர்மானிய கெமிக்கல் ஆயுத ஆய்வாளர் வால்டர் ஷ்ரெய்பர் டெக்சாசில் பணியாற்றி வந்தார். இவர்தான் நாஜி வதைமுகாமின் பிரதான காரணகர்த்தா என்பது தெரிந்தவுடன் அர்ஜென்டீனாவுக்கு தப்பி ஓடினார்.

1956: அமெரிக்க ராணுவ மேனுவல் வெளிப்படையாக உயிர்-ரசாயன போர் முறை தடை செய்யப்படவில்லை என்று அறிவித்தது. ஜெரால்ட் ஃபோர்ட் இது குறித்து கொள்கை அளவில் மாற்றம் கொண்டுவர துணையாக இருந்தார். அதாவது அமெரிக்கா ரசாயன் ஆயுதங்களை முதலில் பிரயோகிக்க அதாரிட்டி வழங்கப்பட்டது.

1959: முதலில் ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவில் தோற்கடிக்கப்பட்டது.

1961: அதிபர் கென்னடி நிர்வாகம் ரசாயன ஆயுதங்களுக்கான பட்ஜெட்டை 75 மில்லியன் டாலர்களில் இருந்து 330 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது.

1962: கியூப ஏவுகணை நெருக்கடியின் போது அமெரிக்க விமானங்களில் ரசாயன ஆயுதங்கள் நிரப்பப்பட்டன.

1968: அமெரிக்க ராணுவ தலைமைப்பீடமான பென்டகன் ஆர்பாட்டக்காரர்கள் மீது ரசாயன பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று கோரியது. மேஜர் ஜெனரல் மெடாரிஸ் அப்போது குடிமக்கள் ஆர்பாட்டம் செய்யும்போது ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பது இரண்டு விதத்தில் நன்மை பயக்கும் என்றார். ஒன்று அவர்களை பயமுறுத்துவது, மற்றொன்று ரசாயன ஆயுதங்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் அது உதவும் என்று விசித்திர யோசனை ஒன்றை முன்வைத்தார்.

1969: உத்தா ரசாயன ஆயுதங்கள் விபத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி.

1971: வியட்நாம் போரின்போது வியட்நாமில் சுமார் 6 லட்சம் பேருக்கு சோறு போட்ட வயல்வெளிகளை ரசாயன ஆயுதம் கொண்டு அழித்து ஒழித்தது அமெரிக்கப் படை.

தெற்கு வியட்னாமிய போராளிகள் மீது வெள்ளை பாஸ்பரஸ் கிரனேட்கள் பிரயோக்கப்பட்டன. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவிற்கு எதிராக உருவான பாரா மிலிட்டரி படைகளிடம் அமெரிக்கா பன்றிக் காய்ச்சல் வைரஸ்களை கொடுத்து கியூபாவில் பரப்ப சதி செய்ததாக செய்தித்தாள் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

1979: ஜிம்பாவே விடுதலைப்போரின்போது கடைசி கட்டத்தில் ருடீசியாவின் வெள்ளை அரசு கறுப்பரின மக்கள் மீது ஆந்த்ராக்ஸ் என்ற கொடிய நோய் கிருமியை பரப்பியது.

1984: இந்தியாவில் போபால் விஷ வாயு துன்பம் நிகழ்ந்தது. காரணம் அமெரிக்க ரசாயன நிறுவனம்.

1985: ஈராக்கிற்கு அமெரிக்கா ஏகப்பட்ட ரசாயன ஆயுதங்களை வழங்கியது.

இப்படியே இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது வரை கூறிகொண்டே போகலாம்.

கடைசியாக சிரியாவில் போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்கள் பிரயோக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

சிரியா போன்ற நாடுகளுக்கு ரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்ய முடியுமா?

உலகின் பணக்கார, ராணுவ பலம் மிக்க நாடுகள் அவ்வப்போது வியாபாரம் செய்ததன் விளைவுதான் இந்த கொடூரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.