கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவாமி ராமச்சந்திரன். சட்டக் கல்லூரி மாணவியான இவர், 'ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.
நவாமி இடதுசாரிகளுக்கு ஆதரவாக பல கருத்துகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருபவர். அண்மையில் பெண்களின் மாதவிடாய் பிரச்னையைக் குறித்து எழுதப்பட்ட ஒரு கவிதையை தன் ஃபேஸ்புக்கில் அவர் பகிர்ந்த போது பலத்த கண்டனங்களும் வசைகளும் அவருக்கு எதிராக எழுந்தன.
இது குறித்து நவாமி ராமச்சந்திரன் கூறுகையில், 'மாதவிடாய் பற்றி சமூக வலைதளங்களில் பேசியதால் மிரட்டலுக்கு ஆளான இளம்பெண் ஒருவரை ஆதரித்து நான் இந்தக் கவிதையை எழுதினேன். என்னை எதிர்ப்பவர்கள் ஃபேஸ்புக்கில் மட்டுமின்றி நேரிலும் மிரட்டி வருகின்றனர்.
என்னை மட்டுமல்லாமல், பள்ளி செல்லும் எனது தங்கை லட்சுமியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டித் தாக்கினர். இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று நவாமி கூறினார்.
தற்போது சிறுமி லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை மிரட்டியும் தனது சகோதரியைத் தாக்கியவர்களை கண்டுபிடிக்க போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நவாமி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.