இதற்காக ரோட்டைச் சுற்றி பல இடங்களை கையகப்படுத்தி உள்ளனர்கள். இங்கு மணல் குவாரிகள் அமைப்பதற்கான அரசு உரிமைகளை பெறும் பணிகளிலும் மும்முரமாக உள்ளனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இங்கு மணல் குவாரிகள் அமைக்கப்படுவதாக தகவல் உள்ளன.
இப்படி இங்கு மணல் குவாரிகள் அமைத்தால், தற்போது உள்ள நிலத்தடி நீர் மட்டம் 500 அடியில் இருந்து 1000 மற்றும் 1500 அடிக்கும் கீழே சென்றுவிடும். கழுத்தைபாறை ரோட்டைச் சுற்றி உள்ள கிராமங்களான, கீழத்தூவல், சாம்பக்குளம், பொழிகால், கேளல், மற்றும் K.R.பட்டணம் ஆகிய கிராமங்கள் நிலத்தடி நீரை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மணல் குவாரி நிலத்தடி நீரை மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து, இப்பகுதியின் சுற்றுச்சூழலையும் கெடுத்துவிடும்.
மக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க அமையவிருக்கும் இந்த மணல் குவாரியினை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் இதில் தலையிட்டு, இந்த மணல் குவாரியினை தடுத்து நிறுத்தி, சுற்றி உள்ள கிராமங்கள் இயற்கையையும், அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை அமைத்திட ஏற்படுத்தித் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு.
கீழத்தூவல், சாம்பக்குளம், பொழிகால், கேளல் மற்றும் K.R.பட்டணம் கிராம பொதுமக்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.