இது மதம் சார்ந்த பதிவு அல்ல வரலாறு தொலைகிறதே என்ற ஆதங்கம்...
இன்றைக்கு இந்தியா முழுக்க ஒரு பெயர் பிரபலமடைந்துள்ளது என்றால் அது ஈஷா தான்.
யார் இவர்? என்ன இடம் இது என பலரும் இதனைப் பற்றி தேடத் துவங்கியுள்ளனர்.
இவர்களின் கருப்பு வரலாறெல்லாம் நமக்கு தேவையில்லை.
வெள்ளியங்கிரி எனும் மலையடிவாரத்தில் கிடைத்த இலவச நிலத்தில் துவங்கப்பட்ட இம்மையம் தங்களின் மார்க்கெட்டிங் திறமையால் இன்று உலகளவில் பரந்து விரிந்துள்ளனர்.
ஆனால், இம்மலையடி வாரத்தில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான சைவ கோவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.
இதே சிவராத்திரி இரவில் பலரும் 7அடுக்காக உள்ள இம்மலையின் உச்சிக்கு சென்று (கடினமான பாதையைக் கடந்து) இயற்கையாக உருவான லிங்கத்தை வணங்குவர். இது பல நூறு ஆண்டு வழக்கம்.
இந்த லிங்கம் ஆதியோகி போல பிரமாண்டமாகவோ பளபளவெனவோ இருக்காது இயல்பாகவே இருக்கும்.
ஆனால் இங்கு வரும் பல சுற்றுலா பயணிகளுக்கும் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியவில்லை. சிவராத்திரி என்றாலே ஈஷா என்ற மாயை உருவாகிவிட்டது.
வெறும் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு கார்பரேட் ஆன்மிக மையம் 2000 ஆண்டு பழமையான ஒரு கோவிலின் புகழை மறைத்து விட்டதெனில் பணமும், ஊடக பலமும் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது புரியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.