06/01/2018

அதிகாரிகளின் வயிற்றில் புளியை கரைக்க வைக்கும் சட்டம் : இது மட்டும் நடந்தால், மக்களுக்கு ரூ.5000 அபராதம் கொடுப்பார்கள்...


உழலை முற்றிலுமாக ஒழிக்கக்கூடிய லோக் ஆயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை கொண்டுவர வேண்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையேற்று உரையாற்றினார். அப்போது சேவை பெறும் உரிமை சட்டம் மற்றும் தகவல் அரியும் உரிமை சட்டம் குறித்து அவர் பேசியதாவது:

சேவை பெறும் உரிமை சட்டத்தின் படி, பொதுமக்கள் என்னென்ன சான்றிதழ்கள், அதிகாரிகளிடம் கேட்கிறார்களோ, அதனை குறிப்பிட்ட கால அளவுக்குள் கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால், புகார் அளிக்க முதல் நிலை அதிகாரி இருப்பார். அவரும் சான்றிதழ் தரவில்லை என்றால் அடுத்து இரண்டாம் நிலையாக ஒரு அதிகாரி இருப்பார்.

அவரும் கொடுக்கவில்லை என்றால், அந்த அதிகாரிகள் 500 முதல் 5000 ரூபாய் வரை விண்ணப்பித்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

ஆனால், இப்போது உள்ள நிலை, சில அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால் தான் கோப்புகள் போகும். சில நேரம் பணம் கொடுக்காவிட்டால் கோப்புகள் காணாமல் கூட போகும்.

இப்படி மனு போட்டவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் இது. முதலில் மத்திய பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டதாக நினைக்கிறேன். ஆனால், சிறப்பாக செயல்பட்டு வருவது ஹரியானா மாநிலத்தில் என்று கூறுகிறார்கள். அதனை பத்தரிக்கையாளர்கள் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

2005ல் கொண்டு வரப்பட்ட ஆர்.டி.ஐ. இன்று எங்கும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் சுறுக்கிவிட்டார்கள். இங்கு 7+1 என்று உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் 10+1 உள்ளனர். தமிழகத்தில் நேர்மையற்றவர்கள், கட்சியினர்களே ஆணையர்களாக உள்ளனர்.

வழக்கறிஞர் பாலு ஒரு தகவல் கேட்டு மனு தாக்கல் செய்தால், ஒன்று காணாமல் போகும், அல்லது புரியவில்லை என்று புதிதாக மனு தாக்கல் செய்ய கூறுவார்கள். 6 மாதங்கள் காலம் தாழ்த்துவார்கள். மீண்டும் கேட்டால், பல பொய்யான தகவல்களை கொடுப்பார்கள். அதற்கு தண்டனை நம்மால் கொடுக்க முடியாது.

ஒரு நல்ல அரசாங்கம் அமைய வேண்டும் என்றால், லோக் ஆயுக்தா, ரைக்ட் டு சர்வீசஸ் ஆக்ட் மற்றும் ரைக்ட் டு இன்ஃபர்மேசன் ஆகியவை சரியான அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டும்.

அதற்காக தேர்தலின் போது நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறியிருந்தோம்.

யாராவது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வார்களா? என்று பழமொழி உள்ளது. அதனால் இப்போது உள்ள ஆட்சியாளர்கள் இந்த சட்டங்களை கொண்டு வரமாட்டார்கள்.

அதனால், இந்த சட்டங்களை கொண்டுவர வலியுறுத்தி பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்கள், 10 நாட்கள் அரசு தொடர்பான செய்தியை வெளியிட மாட்டோம் என்று இருந்தால் கண்டிப்பாக அமையும், என்று கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.