தமிழ்சமூகம் ஏன் குடிகாரர்களாக, ஊதாரிகளாக, கேளிக்கை விரும்பிகளாக மாறிப்போனது...
ஒற்றைக் காரணம் தான், அது வணிகனின் வணிகம் மேம்பட என்பது தான்...
வணிகன் தனக்கான வணிக மேம்படுத்தலுக்காகவும்...
சந்தை விரிவாக்கத்திற்காகவும் நடிகர்களை பயன்படுத்துகிறான்...
இந்த நடிகர்களை உருவாக்கியவனும் அவனே...
இந்த நடிகர்களை உங்களிடம் சேர்ப்பதற்காகவே ஊடகங்கள்..
ஊடகங்களும் வணிகனுடையதே..
நடிகனைக் கொண்டு உங்களை குடிக்க வைத்தான்...
ஜீன்ஸ் அணியவைத்தான்...
பைக் வாங்க வைத்தான்..
வலுக்கட்டாயமாக காதலிக்க வைத்தான்...
அத்தனையும் வணிகத்திற்காக...
அரசுகள் அனைத்தும் வணிகனின் தேவைகளை நிறைவேற்றவே உள்ளன..
அரசுகளை உருவாக்கியவனும் வணிகனே...
பிறகு அரசுகள் மக்களுக்காக செயற்படவில்லை என கோபப்படாதீர்கள்...
அவை மக்களுக்கானவை அல்ல...
புதிய அரசுகள் அமைய நடிகன் களம் வருவான்...
ஊடகம் அவனுக்கு துணை நிற்கும்..
வணிகம் பொருள் செலவை ஏற்கும்..
அத்தனையும் வணிகனுக்காக..
ஒருபோதும் இந்நான்கும் ஒன்றை ஒன்று எதிர்க்காது..
இவர்கள் வணிகத்திற்கானவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல..
இவர்களிடம் இருந்து விலகியே இருங்கள் நாகரீகம், கேளிக்கை, காதல் என்ற மாயையில்.. உங்களை சிக்க வைத்து சீரழிக்கும் வஞ்சகர்கள் இவர்கள்....
அனைத்தும் வணிகன் என்கிற கார்ப்பரேட்ஸ் தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.