21/05/2018

மாட்டுக் கறியும் பாஜக வாஜ்பாயி பெயரும் வரலாற்றில் ஆதாரம்...


மரியாதைக்குரிய ஒரு பேச்சாளரின் பேச்சு என்னை இப்புத்தகத்தை படிக்க தூண்டியது..

அதில் நான் கவனித்து திடுக்கிட்ட வாக்கியங்களை தருகிறேன் ஆதாரத்துடன்..

முதலில் மாட்டுக்கறி விஷயத்தை தருகிறேன்.. தொடர்ந்து படியுங்கள்...

சங்கராச்சாரியார் இவரை பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை இவர் தெய்வத்தின் குரல் என்ற புத்தகம் எழுதியுள்ளார் இது பல பாகங்ககளாக வந்துள்ளது.

அதில் இரண்டாவது தொகுதியில் புலாண் உண்ணுதல் பற்றிய வேதகால விஷயங்களை அவர் எழுதியுள்ளார்.

எப்படி பட்டும் படாமலும் எழுதியுள்ளார் என்பதை நீங்கள் படிக்கும் பொழுதே தெரிந்து கொள்ளலாம்.

யாகம் என்பது மூன்று அடிப்படையை கொண்டு உருவானது.

ஒன்று மந்திரம்..  இரண்டாவது தேவதை.. மூன்றாவது அவீஸ் ..

இந்த அவீஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் சாதாரணமாக போகலாம். ஆனால் இதன் அர்த்தம் பலியிடுதல்..

இந்த அவீஸ் யாகத்தில்...

ஆடு மாடு குதிரை மிகவும்
பெரும்பாலும் மாடு தான் .. அந்த காலகட்டத்தில் பயன்படுத்த பட்டது
இதற்கு மிகப்பெரிய உதாரணம் வாஜ்பேயி என்ற பட்டம்..

ஆரியர்கள்  நடத்துகின்ற யாகத்தில் மிகப்பெரிய யாகத்தின் பெயர், வாஜ்பேய யாகம்.

அதை வச்சுத்தான் அடல் பிகாரி வாஜ்பேய் என்ற பெயரும் உருவானது..

வாஜ்பேய யாகத்தை நடத்தினால் 23 பசுக்களை வெட்டி நிறுத்தி போட வேண்டும்.

இப்படி அரசனுக்கும் ஆரியனுக்கும் பாமரனுக்கும் எவ்வளவு மாடுகளை வெட்டி யாகம் செய்ய வேண்டும் என்று கணக்கு உள்ளது..

மேலே உள்ள தொடருக்கு வருவோம் சங்கராச்சாரியார் சொல்லுகிறார்..

உலக தீசடைகளுக்காக அவீஸ் நடத்தலாம் என்கிறார்.

அதாவது மாடுகளை வெட்டி நெருப்பில் போட்டு யாகம் நடத்துவது உலகில் உள்ள பீடைகளை பிணிகள் போகும் என்பதாக அர்த்தம்..

நமக்கு ஒரு சந்தேகம் யாகத்தில் [நெருப்பில்] இடப்படும் மாடுகளை என்ன செய்வது ?

பேசுவோம்..

ஆதாரம்:

தெய்வத்தின் குரல்.
வானதி பதிப்பகம் .
தொகுதி இரண்டு
ஜ்யோதிஷம் மீமாம்சை பாடம் .

இதெல்லாம் விட ராமர் சீதைக்கு நெய்யில் வாட்டிய மாட்டு இறைச்சியை ஊட்டி உண்டு மகிழ்ந்தார்கள் என்ற வால்மீகியின் வரலாறும் உண்டு..

[இதற்கு ஆதாரம் இராமாயணத்தில் உண்டு பின்னர் விளாவாரியாக பதிவிட்டு ஆதாரம் தருகிறேன்]...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.