13/02/2018

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட சிபிஎம் பாலபாரதி...


திண்டுக்கல் அருகே சித்தரேவு ஜங்ஷனில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் உள்ளதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரமுகர்  பாலபாரதியிடம் முறையிட்டனர். கடையை அகற்றாவிட்டால் இன்று பொதுமக்களை ஒன்று திரட்டி கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி பாலபாரதி தலைமையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், அப்பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி கடைக்கு முன்பு கூடினர். அப்போது கடையை திறக்க வந்த ஊழியர்களை மறித்து கோஷமிட்டனர். பட்டிவீரன்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அதனை கேட்காமல் அவர்கள் கடைக்கு பூட்டு போட்டனர். மேலும் மதுபான கடைகளை திறந்து இளைய சமுதாயத்தினரை சீரழிக்காதே, பெண்களை விதவைகள் ஆக்காதே என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்களும் போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.