25/12/2018

வானம் என்றால் என்ன ? வானம் என்று எதை அழைக்கிறோம்? அதன் உருவ அமைப்பு என்ன?


வானம் என்பது தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்று யாரவது கூறினால், அவர் இலக்கியவாதியாக, பேச்சாளராக அல்லது பக்கா பிராடாக இருக்கலாம், நீங்கள் பூமியில் இருந்து மேல் நோக்கி பறந்து வானத்தை தொட்டுவிடலாம் என்று நினைத்தால் பறந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

முடிவே கிடையாது,, என்னை பொறுத்தவரையில் அதை வானம் என்று அழைப்பதே தவறு,, அதை 'இடைவெளி' (Space) என்று தான் அழைக்க வேண்டும்,வானவில் பார்த்திருப்பீர்கள்,மழை காலத்தில் மட்டுமே வானவில் தெரியுமென்று முட்டாள்தனமாக இருந்து விட வேண்டாம்.

தினமும் காலை பல் விளக்கி விட்டு வாய் கொப்பளிக்கும் போது (பல் விளக்குபவர்கள் மட்டும் ) சூரிய ஒளியில் நின்று கொஞ்சம் ஆற்றல் கொடுத்து உங்கள் வாயில் இருக்கும் நீர்த்துளிகள் மிக மிகச்சிறிதான துளிகளாக மாற்றி வெளியே அனுப்பி பாருங்கள், உங்கள் கண் முன்னர் வானவில் வந்து போகும்.

ஒளி என்பது அனைத்து வண்ணங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு, ஒரு தொகுப்பாக கூட்டமைப்பாக வரும் வெள்ளை ஒளியை சிதறடிக்க வேண்டும், அப்படி சிதறடித்தால் தான் அதில் ஒளிந்திருக்கும் வண்ணங்கள் வெளிப்படும். 

ஒரே ஒரு நீர்த்துளி என்பது மிக மிகச்சிறிய அளவில் உள்ள ஒரு பொருள், மிக மிகச்சிறிய ஒரு பொருளால் தான் மிகச்சிறிய அலை நீளங்கள் உள்ள ஒளியில் உள்ள வண்ணங்களை சிதறடிக்க முடியும் இப்போது வானவில்லில் இருக்கும் நீல ஒளியை மட்டுமே பார்க்கிறீர்கள் அது தான் வானம்.

நீங்கள் பார்ப்பது, வெள்ளை ஒளியின் சிதறடிக்கப்பட்ட ஒரு அலை நீளத்தை தான்,காரணம் நமது அட்மொசு(ஸ்)பியரில் நீல நிறத்தை மட்டும் சிதறடிக்கும் அளவிற்கு தூசுக்கள் நிறைந்து இருக்கின்றன.

அதனால் தான் பகலில் நாம் பூமியில் இருந்து மேல் நோக்கி பார்க்கும் போது நீல நிறம் தெரிகிறது.

இரவில் சூரிய ஒளி இல்லாததால், எல்லையற்ற 'இடைவெளி' (Space) அப்படியே தெரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.