முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) −2...
இப்படி போருக்கான அடிப்படை விதிமுறைகள் கூட அறியாத இக்காட்டுமிராண்டிக் கூட்டம் கண்ணில் பட்ட அனைத்தையும் சிதைத்தது.
அன்தாகியா நகரிலிருந்து முன்னேறிய சிலுவை வீரா்கள் கி.பி.1098ம் ஆண்டு சிரியாவின் பல நகரங்களையும் கைப்பற்றினர்.வெறியோடும் வஞ்சகத்தோடும் அந்நகரினுள் நுழைந்த சிலுவை வீரா்கள் எதிர்ப்பட்ட முஸ்லிம்களையெல்லாம் கொலை செய்ததோடு வீடுகளைச் சூறையாடி தீயிட்டுக் கொளுத்தினர்.முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டனர். இங்கு கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு இலட்சம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
அதன் பின்னர் சிலுவை வீரா்களின் படை ஜெரூஸலத்தை நோக்கி நகரலாது,அப்போது அப்பகுதி பாதிமிய்ய(பாதிமிய்யர் என்பது அப்பாஸிய ஆட்சியின் கீழ் ஆட்சி செய்த முஸ்லிம் சிற்றரசாகும்)ஆட்சியின் கீழ் இருந்தது.நாற்பது நாட்கள் தொடர்ந்த கடுமையான முற்றுகையின் பின் 1099−ஆம் ஆண்டு ஜெரூஸலம் ஆக்கிரமிக்கப்பட்டது.ஒரு மாதத்திற்கும் அதிகமாக நீடித்த முற்றுகையில் தமது வழக்கமான இழி செயல்களில் சிலுவை வீரா்கள் இறங்கினர்.
நாற்பது நாட்களுக்குப் பின் அந்நகரத்தை வெற்றி கொண்ட இப்பாதகா்கள் அங்கும் கண்களில் பட்ட அனைவரையும் இரக்கமின்றி கொன்று குவித்தனர்.பாதைகளில், வீடுகளில், பள்ளிவாசல்களில் என்று எல்லா இடங்களிலும் இருந்த முஸ்லிம்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்ற பேதமின்றி கொலை செய்தனர்.
பைதுல் முகத்தஸைக் கைப்பற்றிய சிலுவை வீரா்கள் அந்த மஸ்ஜித்துக்கு எவ்வித மதிப்பும் அளிக்கவில்லை. மிகவும் மோசமான, காட்டு மிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்டனர். பைதுல் முகத்தஸை அண்டியிருந்த முஸ்லிம்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர்.
மேலும் பல வரலாற்றுத் தகவல்களுடன் அடுத்தப் பதிவில் தொடர்கிறேன்.
- தொடரும்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.