மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் தடுப்பு மசோதா பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டார். அதற்கு எம்.பி.க்களிடையே சிரிப்பொலி எழுந்தது.
‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக, மேனகா காந்திக்கு திருநங்கைகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேஜையை தட்டியபடி சிரித்த மேனகா காந்தியும், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்நிலையில், மேனகா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மற்றொருவர் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் சிரிக்கவில்லை. திருநங்கைகள் பற்றிய அதிகாரபூர்வ சொல் எனக்கு தெரியாது. அதுவே எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல், அதிகாரபூர்வ தகவல் தொடர்பில், திருநங்கையர் ‘டி.ஜி.’ என்று குறிப்பிடப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.