மனுஸ்மிருதியை தீயிட்டு கொளுத்தினார் அம்பேத்கர்...
மனுஸ்மிருதியும் அம்பேத்கரும்...
மனுஸ்மிருதியை காரணம் காட்டி நீதிபதி தடையுத்தரவு செய்ததற்கு எதிர்வினையாக அம்பேத்கர் செய்தது இப்பதிவின் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.
தொடர்ந்து படியுங்கள்.
திடீர் தடை உத்தரவு செய்யப்பட்ட செய்தி அம்பேத்கருக்கு வந்துசேருகிறது.
மறுபக்கம் மகத் சத்தியாக்கிரகம் அதோடு மாநாடு நடத்தும் நிகழ்வுக்காக
அம்பேத்கரின் கட்டளை பேரில் ஊர் மக்கள் தயாராகி வருகின்றனர்.
தம் சார்ந்த மக்களை மிரட்டியும் ஊர் விட்டு ஒதுக்கிவிடுவோம் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் மகத் தலித் மக்கள் மாநாடு நடத்த தமக்கு சொந்தமான இடத்தை தர யோசித்த நிலையில்..
இசுலாமிய சமூகத்தின் கூட்டமைப்பு இவர்களுக்கு உதவிசெய்ய முன் வருகிறது.
ஆம் வரலாற்றில் உள்ளது அம்பேத்கர் சத்தியாக்கிரகம் மற்றும் மாநாடு நடத்த இடம் கொடுத்து உதவியது ஒரு இசுலாமியர்.
சுபேதார் காட்ஜே..
போன்ற மக்களால் பத்து நாட்களுக்கு தேவையான உணவு நீர் உட்பட பல்வேறு விஷயங்கள் வெளிஊரில் இருந்து வரவழைக்கப்பட்டது.
அம்பேத்கர் எடுத்த முடிவு மாநாடு நடத்துவதில் உறுதியாக இருந்தார்.
டிசம்பர் மாதம் 19 ம் தேதியில் இருந்து வெளியூர் மக்கள் மகதில் சாரை சாரையாக கூட ஆரம்பித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் ஊர் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர்.
மாவட்ட குற்றவியல் நடுவர் மாநாடு திடலுக்கு வந்து பிரமுகர்களை சந்தித்து சத்தியாகிரகத்தை தயவுசெய்து கைவிடுமாறு வலியுறுத்திக்கொண்டு இருந்தார்.
அம்பேத்கர் இருநூறு பிரதிநிதிகளுடன் பம்பாயில் இருந்து புறப்பட்டு மறுநாள் மகத் நகரின் ஐந்து மைல் தூரத்தில் உள்ள தாஸ்கவுன் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
இங்குதான் சத்தியாகிரகம் செய்ய இருந்த 3000 பேர் அம்பேத்கருக்காக காத்திருந்தனர்.
எல்லாம் புறப்பட தயாராக இருந்த நிலையில் ஒரு கடிதம் வருகிறது
மாவட்ட குற்றவியல் நடுவர் நயமான முறையில் சத்தியாகிரகத்தை கைவாடுங்களேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
பதிலாக அம்பேத்கர் அவருக்கு கூறுகையில் மாநாடு நடந்தே தீரும். இது சம்பந்தமாக உங்களுக்கு கருத்து கூற விரும்பினால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் மாநாட்டில் உங்களை சிறிது நேரம் பேச அனுமதிக்கிறேன்
என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
வழிநெடுக வாழ்த்து கோசமும் பூக்களை வீசியும் அம்பேத்கரை வரவேற்றது மாநாட்டு பந்தல்,
வரலாற்று சிறப்புமிக்க தமது உரையை பேசினார் அம்பேத்கர் (கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசிய பேச்சை இங்கு தொகுக்க முடியாது வாய்ப்பு இருந்தால் ம்றறொரு நாள் இதைப்பற்றி படிப்போம்).
அம்பேத்கர் பேசியவுடன் திரு சகஸ்திரபுத்தே என்பவர் பிராமணர்கள் இப்படி நம்மை இழிவுபடுத்த காரணம் அவர்களின் வேதம் தான் மனுஸ்மிருதியில் சூத்திரர்களை எவ்வாறெல்லாம் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ள பக்கங்களை மக்கள் மத்தியில் கூறினார்.
இப்படிப்பட்ட மனுஸ்மிருதியை நாம் தீயிட்டு கொளுத்துவதை தவிர வேறெதுவும் நல்லது இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்பேத்கர் உடன் ஏனைய தலைவர்கள் திரு டீ வி பரதன் உட்பட அந்த மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு மனுஸ்மிருதி தீயிட்டு கொளுத்தப்ட்டது.
நூற்றாண்டு காலமாக எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பதிலடியாக மனுவை தீயிட்டு எரிக்கிறோம்.
என்று கூறிக்கொண்டே அம்பேத்கர் தீயை பற்றவைத்தார்.
பெரியார் மட்டுமே வேதத்தை தீயிட்டு கொளுத்தினார் என்று கூறப்பட்ட நமக்கு அம்பேத்கர் தீயிட்டு எரித்ததை ஏன் கூறவில்லை.
அம்பேத்கர் இந்துத்துவாவை கடுமையாக எதிர்த்தார் என்று இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது.
ஆயினும் இந்துத்துவா மேடைகளில் அம்பேத்கர் படம் வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.
மனுவை தீயிட்டு கொளுத்திய அம்பேத்கரை இவர்கள் வைத்துருப்பது பாசத்தினால் அல்ல..
வேசத்தினால்.
களையப்படுத்துவோம் வேசத்தை.
இந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவைகள் எல்லாமும் இன்றைய மக்கள் அறியப்பட வேண்டியவை.
பேசுவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.