22/07/2018

சொந்த செலவில் 14 குளங்களை வெட்டிய 82 வயது முதியவர்.. கிண்டல் கேலிகளுக்கு நடுவே சாதனை...


கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் உள்ள தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேமேகவுடா. 82 வயதான இவர் மலவள்ளி தாலுகாவில் மொத்தம் 14 குளங்களை வெட்டி உள்ளார். ஆடு மேய்ப்பாளரான இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு தனது ஆடுகளை வழக்கம் போல மலைப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடுகள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.

மலைப்பிரதேசமாக இருந்தாலும் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சுவடுகளே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்படியானால் இங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீருக்காக எங்கு போகும் என்று யோசித்தார். அடுத்த நாளே தனது ஆடுகளில் இரண்டை விற்று மண்வெட்டி மற்றும் கடப்பாறை வாங்கினார். இதனை கொண்டு தாசனதொட்டியில் அடுத்த 6 மாதத்தில் முதல் குளத்தை வெட்டினார்.

அன்று முதல் இன்றுவரை 40 ஆண்டு உழைப்பின் பயனாக 14 குளங்களை வெட்டி உள்ளார். இதற்காக தனது சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை இவர் குளங்கள் வெட்டுவதற்காகவே செலவழித்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் கோமேகவுடாவை பைத்தியம் பிடித்து விட்டதா என கூட திட்டி உள்ளனர்.

ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தனி ஆளாக குளங்களை இன்றும் வெட்டி வருகிறார். இதுவரை குளங்களை வெட்ட 15 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

இவரது சேவையை பாராட்டி பசவஸ்ரீ விருது கூட கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கிடைத்த பணத்தையும் குளம் வெட்டவே பயன்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.