22/07/2018

பாஜக நிர்மலா சீத்தாராமன்...


HAL எனும் அரசு நிறுவனத்திற்கு வரவேண்டிய  விமான காண்ட்ராக்டை அம்பானிக்கு ரஃபேல் நிறுவனம் மூலமாக தாரை வார்த்த நிர்மலா சீதாராமனைப் பற்றிய கேள்வி வந்ததும், நம்மூர் தொலைக்காட்சியில் எப்படி பாஜக கும்பல் கத்தி- கதறி பேச்சை திசை திருப்புவார்களோ அதே போல பாராளுமன்றத்திலும் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது...

இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்த்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டட் எனும் அரசு நிறுவனத்திற்கான பணியை, அதுவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பணியை தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறது பாஜக. மேலும் இந்த அம்பானி இதுவரை விமான தயாரிப்பிற்கு தேவைப்படும் ஆணியைக் கூட இதுவரை தயாரித்த அனுபவமில்லாதவருக்கு எதற்காக இந்த காண்ட்ராக்ட் வழங்கப்பட வேண்டும்?... 

அனைத்து மிகப்பெரிய காண்ட்ராக்ட்டுகளும் குஜராத்தி மார்வாடிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது தான் ’பாரத் மாதா கீ ஜே’ எனும் தேச பக்தியா?.. 

அரசு நிறுவனத்திற்கு செல்லவேண்டிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த, ராணுவ ரகசியம் நிறைந்த தொழிற்நுட்பத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது தான் பாஜகவின் தேசபக்தியா?

இந்திய அரசு நிறுவனங்களை மூடி, தனியாருக்கும், வெளிநாட்டு நிறுவனத்திற்கும் முதலீடுகளை அள்ளி வீசுவது தான் தேசபக்தியா?

அம்பானிக்கு எங்கள் சொத்துக்களை தாரை வார்ப்பதை எதிர்த்தால் நாங்கள் சமூகவிரோதிகளா?...

தேசத்தின் ரகசியங்களை நீங்கள் சமரசம் செய்வதை அம்பலப்படுத்தினால் நாங்கள் தேச விரோதிகளா?

வணிகத்தை அதிகரிப்பதற்காகவும், மார்வாடிகளுக்கு மூலதனத்தை அதிகரிக்கவும்  அழைக்காமலே சீனாவிற்கு  சென்று   சமரசம் செய்த மோடியா தேச பக்தர்...  இதை கேள்வி கேட்கும் நாங்களா  சீன உளவாளிகள்...

டோக்லாம் எனும் எல்லைப் பிரதேசத்தில் சீனாவின் ராணுவம் நகர்த்தப்பட்ட போது, ஏதோ சண்டைக்கு போவது போல வீரவசனம் பேசிவிட்டு சீன அதிபரிடம் சமரசம் பேசியதை உலகம் பார்த்துக்கொண்டு தானே இருந்தது  சங்கிகளே?..

இங்கே போராடுபவர்கள் சீனாவிடம் காசு வாங்கிக்கொண்டு தேசத்தை காட்டிக் கொடுப்பதாக புலம்பும் போலி தேசபக்தர்களே, சீனா
இலங்கையின் ஹம்பந்தோட்டையில் துறைமுகம் கட்டுவதற்கு அனுமதித்த யோக்கியவானகள் நீங்கள் தானே?...  அமெரிக்கா  திருகோணமலையில் படை நிறுத்த இலங்கை அனுமதி தர சொன்ன யோக்கியவான்களும் நீங்கள் தானே?... 

இந்த தேசத்தை வெளிநாட்டுக்கு காட்டிக் கொடுக்கும் கும்பல்  ’தேசபக்தி ’ என்று புலம்பிக்கொண்டு திரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.