ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
இதில் பரணி, ரோஹிணி, திருவாதிரை, பூரம், உத்திரம். பூராடம், உத்திராடம், பூரட்டாதி, இந்த ஒன்பது நட்சத்திரங்களும், மனுஷ கண நட்சத்திரங்கள் ஆகும்.
அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி, இந்த ஒன்பது நட்சத்திரங்களும். தேவ கண நட்சத்திரங்களாகும்.
கிருத்திகை, ஆயில்பம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், இந்த ஒன்பது நட்சத்திரங்களும், ராட்சஷ கண நட்சத்திரங்களாகும்.
இதில் மனுஷ கணம் என்ற மானுட வர்க்கத்தோடு தொடர்புடைய நட்சத்திரத்தை உடையவர்களின் கண்களுக்கு ஆவிகள் கண்களுக்கு புலப்படாது. இவர்களை ஆவிகள் தன் கெட்ட சக்தியின் மூலம் பயமுறுத்துவது, பயமுறுத்தும் சில சேட்டைகளை செய்வது போன்ற செயல்களை, இந்த மனுஷ கணத்தில் பிறந்த நட்சத்திரக்காரர்களிடம் காட்டும்.
அடுத்ததாக தேவகணத்தில் பிறந்த நட்சத்திரகாரர்களின் கண்களுக்கு ஆவிகள் புலப்படும். ஆவிகள் இந்த தேவகணத்தில் பிறந்த நட்சத்திரக்காரர்களின் கண்களுக்கு புலப்பட்டாலும் பயமுறுத்துவதோ அல்லது சேட்டைகள் செய்வதோ போன்ற எந்த செயல்களையும் செய்யாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என்று சொல்வது போல் சென்று விடும்.
அடுத்ததாக ராட்சஷ கணத்தோடு தொடர்புடைய நட்சத்திரக்காரர்களின் கண்களுக்கு ஆவிகள் புலப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு நட்பு என்ற முறையில் அமானுஷ்ய குரலில் பேசுவது, கட்டளைகளை இடுவது, போன்ற செயல்களை செய்யும்.
உதாரணத்துக்கு கிராமங்களில் பேய் பிடித்து தலையை விரித்து போட்டு கொண்டு பேயாடும் பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் ராட்சஷ கணத்தோடு தொடர்புடைய நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள்...
குறிப்பு : சிலர் ஆன்மீக ரீதியாக பயிற்சி பெற்று ஆவிகளை பார்ப்பதும். பேசுவதும் சாத்தியமே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.