22/05/2018

வேற்று கிரகவாசிகள் பூமியில் இருப்பது உண்மை தான்...


ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம என்றே பதில் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகள் இந்த உலகத்தில் உள்ளனர் என்று ஆய்வாளர் ஜெய்ம் மவுசன் போட்டோ ஆதாரத்துடன் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1947ம் ஆண்டு மெக்சிகோவின், ரோஸ்வெல் பகுதியில், பறக்கும் தட்டு மோதியதில், விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், ஏலியன் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மெக்சிகோவில், 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜெய்ம் மவுசன் ஏலியன் புகைப்படங்களை வெளியிட்டு  அதிர்ச்சிப்படுத்தியுள்ளார்.

இவர் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவரும் கூட, என்பதால், இந்த தகவல் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,

1947ம் ஆண்டு விமான விபத்து தொடர்பான புகைப்படங்களில் ஏலியன் இறந்து படுத்து கிடப்பதை போன்ற தோற்றம் உள்ளது. அதை சுமார் ஐந்தாண்டு கால ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம் என்றார்.

ஆனால், ஏலியன்கள் நடமாட்டம் பற்றி, நாசாவோ அல்லது வேறு எந்த ஆய்வு மையமோ உறுதி செய்யவில்லை.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது.

ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டு பிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை.

அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்து போயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம்.

மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை. இவ்வாறு  கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.