கோயம்புத்தூரில் 12 சிக்னல்கள் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பெரியமனலி, ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெய்பிரகாஷ். விசைத்தறி உரிமையாளராக இருக்கிறார். இவரது மனைவி தாமரை. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன் விசைத்தறி இயங்கிக் கொண்டிருந்த போது குழந்தை தெரியாமல், கையை உள்ளே விட்டுள்ளது. இதனால், குழந்தையின் 4 விரல்களும் துண்டாகின.
இதைத் தொடர்து ஜெய்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி தாமரை இருவரும் குழந்தையை தூக்கிக்கொண்டு கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு செல்ல முயன்றனர். ஆனால், போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், தான் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்க தலைவர் திபேஷ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம், ஆம்புலன்ஸ்க்கு வழிவிட போக்குவரத்தை சரி செய்ய வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார். இதனை புரிந்து கொண்ட கமிஷனர், அவிநாசி சாலையிலுள்ள சிட்ரா முதல் சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை வரை சாலையெங்கிலும் உள்ள 12 சிக்னல்களையும், ஒரே நேரத்தில் ரெட் சிக்னல் போட்டு போக்குவரத்தை நிறுத்தி வைக்க கட்டளையிட்டுள்ளார்.
அதன்படியே, நேற்று மாலை அனைத்து சிக்னல்களிலும் கிரீன் காரிடம் முறையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, குழந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல வழிசெய்துள்ளனர். இறுதியில், குழந்தையை தூக்கிக் கொண்டு ஜெய்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி தாமரை ஆகியோர் ஆம்புலன்சில் கங்கா மருத்துவமனையை அடைந்தனர். துண்டிக்கப்பட்ட குழந்தையின் விரல்கள் ஐஸ் பெட்டிக்குள் வைத்து, எடுத்துச் செல்லப்பட்டதால், உடனடியாக இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் திபேஷ், அன்னை அறக்கட்டளை ஆனந்த குமார், ஜெய்பிரகாஷ் ஆகியோர் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனை பார்க்கும் போது, சென்னையில் ஒருநாள் படத்தை ஞாபகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.