தமிழ்நாட்டில் முதன்முறையாக பசுமைச் சான்றிதழ் பெற்ற ரயில்நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உருவெடுத்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை, பசுமைக் கழிப்பறை, மின்சிக்கனத்துக்கு எல்.இ.டி. விளக்குகள், தூய்மையான வளாகம், மருத்துவ வசதி, குடிநீர் சுத்திகரிப்பு வசதி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளுக்காக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் பசுமை ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் பசுமைக் கட்டிடக் கவுன்சில் தலைவர் ராகவேந்திரன், பசுமை ரயில்நிலையத்துக்கான சான்றிதழை தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ராவிடம் வழங்கினார். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்பெட்டிகளை தூய்மை செய்யும் பணியும் நடைபெற்றது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.