26/09/2017

இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா?


1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில்...

இந்தி விஷயத்தில் நீ தானே எதிர்ப்பு உண்டாக்கினாய்..

இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள்..

எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்..

தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை..

தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்றும்..

காமராஜர் ஆட்சி அவசியமா?

இந்தி ஒழியவேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர்ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன் என்றும் - 8.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில்
தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.

தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்
இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ,வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்..

சரி 1965ல் இப்படி என்றால் அதற்கு முன்பு ஈ.வே.ரா இந்தியைக் கடுமையாக எதிர்த்தாரா?

இல்லவே இல்லை.

ஹிந்தி இருக்கட்டும், இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை..

அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்.

சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம்.

பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் - விடுதலை (07.10.1948)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.