நமது எல்லாபிரச்சனைக்கும் காரணம் பாசிச மத்திய அரசு மட்டுமல்ல...
மாநில அரசின் தற்குறித்தனமும் பொறுப்பின்மையும் நிர்வாக திறன் இன்மையும் ஆளத்தெரியாத அறியாமையுமே காரணம் ஆகும்.
எதிர்கட்சியும் இந்த ஆட்சிமீது ஏற்படும் மக்கள் வெறுப்பு அடுத்தமுறை தன்னை ஆட்சியில் அமர்த்தும் என நாக்கை சப்புக்கொட்டி விருந்துக்கு பின் எச்சில் இலை தொட்டிக்கு தானே வந்து விழும் எனக் காத்து கொண்டுள்ளது!
அதன் தோழமைகட்சிகளும் அதில் இரண்டு நமக்கு ஏதாவது மிச்சம் மீதி கிடைக்காதா என அத்தோடு சேர்ந்து காத்துக் கொண்டுள்ளது.
இந்த சந்தர்பத்தை கொடூரவெறி கொண்ட மத்திய அரசு மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறது
இந்த கையாலாக ஆட்சியை அகற்ற குமரிமுதல் கும்மிடிபூண்டிவரை ஆண்டகட்சிகள் அவற்றின் தோழமை கட்சிகள் தவிர்த்து ஒரு மக்கள் திரள் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
கட்சி மற்றும் தலைமைகளை முற்றிலும் தவிர்த்து சூழ்நிலைக்கேற்ற மக்கள் கூட்டுதலைமை உண்டாக வேண்டும்.
ஏற்கனவே ஜல்லிகட்டு போராட்டம் நமக்கு தீர்வுக்கான போராட்ட வழிமுறையை கற்று தந்துள்ளது.
இந்த கட்சிக்கு பதில் அந்த கட்சி என்று மாறிமாறி வாக்களிப்பதால் கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
எட்டரைக் கோடி தமிழனும் மொத்தமாய் ஒருங்கிணைப்பு செய்வோம்.
வாழ்வதெனின் எட்டரைகோடி தமிழனும் வாழ்வோம்.
சாவதெனினும் எட்டரைக் கோடி தமிழனும் சாவோம்.
ஆனால் அதற்கு முன் இந்தபேடிகளை ஒரு கை பார்த்துவிட்டு சாவோம்.
கட்டளை வரும் என்று காத்துக் கொண்டிருக்காமல் தகவல் பறிமாற்றம் மட்டுமே செய்து இப்போராட்டம் தொடர் மக்கள் எழுட்சி போராட்டமாக அமையவேண்டும்.
இந்த ஒரு போராட்டம் வெற்றியடைந்து விட்டால் நீட் ஸ்டெர்லைட் காவிரி ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ சாகர்மாலா பாரத்மாலா என அத்தனை அழிவுதிட்டங்களுக்கு எதிரான தீர்வு தானாக கிடைக்கும்.
இனி இந்த மக்களை ஏமாற்ற முடியாது என்ற பயம் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் வரவேண்டும்.
அப்போது தான் இதன்பிறகு வரும் ஆட்சியாளனுக்கு அவன் எந்த கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் மீது பயம் வரும்.
அந்த மக்கள் மீதான பயமே. மக்களின் பலம். அதுவே மக்களாட்சி தத்துவம்.
234 MLA +50 MP மொத்தம் 284 பேர் ஒரு 284 பேரிடம் பெட்டையாகி கிடப்பதா மொத்த தமிழினம்?
உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா.
கொடுவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே.
- தமிழகமீட்புகுழு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.