01/02/2019

மண்ணுக்கும் உழவருக்கும் நண்பன் மண்ணுளிப் புழு - ஒரு அதிர்ச்சித் தகவல்...


பாம்பென்றால் படையே நடுங்கும் என்பர். பாம்பை மனிதர்கள் இன்றுவரை ஒரு காலனாய் தான் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழர்களாகிய நமது முன்னோர்கள் நாகர்கள் என்றும் அரவர்கள் என்றும் அழைக்கப்பட்டது நாகங்களை கையாளும் வித்தையை நன்கு உணர்ந்ததால் என்பதே வரலாறு நமக்கு உரைக்கும் செய்தி. சரி ஏன் இந்த விளக்கங்கள். நேரடியாக செய்திக்கு செல்வோம்.

பாம்புகள் என்றால் ஏன் படையே நடுங்கும் என்றால் பாம்பு கடித்து நஞ்சு பரவத்துவங்கிவிட்டால் அதன் பிறகு அதில் இருந்து உயிரை மீட்பது என்பது சிரமமான காரியமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பல வகையான பாம்புகள் பூமியில் உள்ளன. அவற்றில் பல கொடிய நஞ்சுடையது. பல நஞ்சற்றது. இப்போது நாம் பார்க்க இருப்பது மண்ணுளி பாம்பு, இல்லை இல்லை மண்ணுளி புழு.

ஆம். மண்ணுளி என்பது பாம்பின் இனமே கிடையாது. அது புழுவின் இனம். சற்று பெரிய அளவில் வளரக்கூடிய புழு இனம். பிறகு ஏன் துவக்கத்தில் பாம்பை பற்றி இவ்ளோ பெரிய கதை அளந்தீர்கள் என்று நீங்க கேட்பது தெரிகிறது.

இதோ விடை... சில வருடங்களுக்கு முன்னர் மண்ணுளி பாம்பை கடத்துகிறார்கள். மண்ணுளி பாம்பு ஏதோ கேன்சர் நோய்க்கு மருந்தாக பயன்படுகிரதாம் என்றவாறு பல செய்திகளை நாம் பதித்தும் கேட்டும் இருப்போம். அதுவும் உண்மை இல்லை. அது நம்மை ஏமாற்ற செய்த சூழ்ச்சியே.

என்ன சூழ்ச்சி?

மண்ணுளி புழு என்பது வேளாண்மையின் நண்பன். மண் புழு எப்படி மண்ணில் புரத சத்து உற்பத்தியாக வழி செய்கிறதோ அதை விட பல மடங்கு வீரியமான இயற்கையான உரத்தை மண்ணிற்கும் வழங்கும். இந்த புழு அதிக கூச்ச சுபாவம் கொண்டது.

மேலும் இந்த புழுக்கள் மணற்பரப்பு உள்ள இதங்களில் தான் அதிகம் வசிக்கும். இவைகள் மூச்சு விடுவதன் மூலம் மண்ணில் காற்று கடத்தப்படும் திறனும், ஆக்சிஜனும், நைட்ராஜெனும் அதிகமாகிறது. ஆகவே வேளாண்மையில் அதிகமான விளைச்சலை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இப்படியான நன்மைகளைக் கொண்டிருக்கும் காரணிகளாலே தான் இந்த புழுவை உலக சந்தை குறிவைத்தது. இப்படியான உயிரனங்கள் இருப்பதால் தான் உழவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்யமுடிகிறது. அதனால் அவர்கள் நமது செயற்கை உரத்தையும், பூச்சிமருந்தையும் வாங்காமால் இருகிறார்கள் என்று உணர்ந்த நிறுவனங்கள் தான் இந்த புழுவை பாம்பென்றார்கள், இந்த பாம்பை மருந்தேன்றார்கள், அதற்கு லட்சக்கணக்கில் விலை வைத்தார்கள், நம்மையே அதை கடத்தவும் வைத்தார்கள், இன்று அப்படியான ஒரு புழு இனத்தையே இல்லாமல் செய்து விட்டார்கள்.

சிந்தித்து பாருங்கள் ஒரு புழுவிற்கு லட்சக்கணக்கில் விலை வைக்கிறார்கள் என்றால் அதன் திறன் என்னவாக இருக்கும். அவைகளின் நமது வேளாண்மைக்கு எந்த அளவில் பயன்பட்டிருக்கும் என்று. தொடர்ந்து இந்த வியாபார அரசியலால் நாம் முட்டாளாக்கப்பட்டு வருகிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.