01/02/2019

பிரபல உணவகத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்...


சென்னை வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரு முறை பயன்படுத்திதூக்கி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்ததடையை தீவிரமாக செயல் படுத்தும் விதமாக சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நேற்று வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில்தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பெட்டிகள், கப்புகள், குவளைகள், தட்டுகள் என மொத்தம் 1 டன் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்துறை சார்பில் இதுவரை சுமார் 6.7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.