27/04/2018

இந்த தோல்வியாளன் கேட்கும் கேள்வி.. ஒரு கேள்விக்கு கூட இந்த சமூகத்தில் யாராலும் பதிலளிக்க முடியாது...



ஏனெனில் அவன் படித்துவிட்டு கேள்வியை கேட்கவில்லை..

இந்த சமூகம் அவனை எப்போதும் ஒரங்கட்டுகிறது.

அந்த வலிகளையும், கோபத்தையும் வைத்தே அவன் கேள்விகளை கேட்கிறான்..

ஒருவேளை அவன் நாளை தீவிரவாதியாகவோ, தேசவிரோதியாகவோ சமூகத்தால் அழைக்கப்படலாம்..

குற்றம் செய்தவனே விட அதற்கு உதவியாக இருந்தவனுக்கே தண்டனை அதிகம்..

அந்த தண்டனை ஒருநாள் இந்த சமூகத்திற்கு அவனால் தரப்படலாம்..

அவனின் கோபம் ஒருநாள் இந்த சமூகத்தை சீர்திருத்தவதற்காக கூட மாறலாம்..

அன்றும் இந்த சமூகம் அவனை முட்டாள் என்றே அழைக்கும்..

ஏனெனில் இந்த சமூகம் தனக்கானவனை ஒருபோதும் தங்கள் அருகில் சேர்த்துக்கொள்ள விரும்பாது, இது சுயநலமிகுந்த சமூகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.