27/04/2018

கன்னட பெரியாரும் திருட்டு திராவிடமும்...


சுயமரியாதை தன்மானம் என்று எவற்றை வரையறுத்தார் பெரியார். இதனால் தமிழர்களும் தமிழகமும் பெற்ற கல்வி அறிவூட்டல் என்ன..? பொருளாதார நன்மை என்ன..?

தமிழ் தேசிய உணர்வை இது எந்த வகையில் வளர்த்தது..?

ஏன் திராவிடத்தை தமிழகம் முதன்மைப் படுத்துகிறது..?

இதற்குள் தான் தமிழன் என்பவனின் இனத்துவ சுயமரியாதையும் தன்மானமும் அடங்கி இருக்கிறதா..? அப்படி என்றால் எந்த வகையில்..?

இந்த சுயமரியாதையும் தன்மானமும் 21ம் நூற்றாண்டில் தமிழர்களை தயார்படுத்தி 22ம் நூற்றாண்டில் எப்படி செயற்பட வைக்கப் போகிறது உலக அரங்கில்...? இதற்கு தமிழகத்தின் பங்கு என்ன..?

ஈழத்தில் தமிழ் தேசிய உணர்வோடு.. ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்க ஏன் தமிழகம் தயங்க வேண்டும்..?

இதற்கும் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் ஏதாவது தொடர்பை காண்பித்திருக்கிறதா தமிழகம்..?

தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் தானா..?

ஓரிரண்டு குரல்களைத் தவிர ஏனைய தமிழ்மக்களின் குரல் ஏன் நசுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தமிழீழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறது..?

இன்னும் இந்திய தேசியத்துக்கு அடிபணிந்து தானே உள்ளது தமிழகம். அப்படி இருக்க..

இந்த சுயமரியாதையும் தன்மானமும் எதைக் குறித்து எழுந்து நிற்கிறது. தமிழர்களின் திராவிட அடையாளம் குறித்தும் பார்பர்ன பிராமண இந்து சமய எதிர்ப்பு குறித்து மட்டும் தானா..?

ஏன் தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் இதர மதங்களை நோக்கி மக்களை அன்போடு வழி அனுப்பி வைக்கும் போது எங்கே போகின்றது இந்தச் சுயமரியாதையும் தன்மானமும் பகுத்தறிவும்.?

அது ஏன் இந்து சமயத்தை மட்டும் கண்டவுடன் இவை விழித்துக் கொள்கின்றன. மற்றைய மதங்களை ஏன் மென்போக்கோடு அணுகுகிறது.?

பகுத்தறிவுவாதிகள் எவராவது இறந்த மனிதன் ஏசு உயிர்த்ததற்கு சான்று கேட்டிருக்கின்றனரா..? அல்லா எங்கிருக்கிறார்.. அவருக்கு என்ன உருவம் என்பதற்கு சான்று கேட்டுள்ளனரா..?

அது ஏன் பகுத்தறிவு இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகள் சமயம் மட்டும் சார்ந்து தானா எழுந்துள்ளது. வேறு வகைகளில் இல்லையா.?

ஏன் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளில் மூடநம்பிக்கைகள் இல்லையா..? மத நம்பிக்கைகள் இல்லையா..? அவர்கள் ஏன் அறிவியலை ஊட்டுகிறார்கள்.. பகுத்தறிவு என்பதையும் சுயமரியாதை என்பதையும் தன்மானம் என்பதையும் உச்சரிச்சுக் கொண்டு மத எதிர்ப்பை சமூக எதிர்ப்பைச் செய்யவில்லை..?

அது ஏன் ஊருக்கு சொல்லும் சுயமரியாதை பகுத்தறிவை நீங்களும் உங்கள் குடும்பங்கள் மட்டும் கடைப் பிடிப்பதில்லை.. அனைத்தும் தொண்டனுக்கும் தமிழனுக்கும் மட்டும் தானா?

இப்படி பல தொடரான வினாக்களுக்கு நீங்கள் விடை கூறத் தயாரா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.