27/04/2018

நவம்பர் 18 1978 அமெரிக்கா வில்...


அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள கயானாவை சேர்ந்த ஜோன்ஸ் டவுன் என்கிற பகுதியில் சுமார் ஆயிரம் பக்தர்கள் கூடியிருக்கிறார்கள் உயரமான மேடை.. ஒலிப்பெருக்கியில் பக்திமயமான இசை.. திடீரென்று பக்தர்கள் பரவசமாக கூக்குரல் எழுப்ப ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்.

இசை பணிவோடு நிறுத்தப்படுகிறது.
காற்றைக் கிழித்துக்கொண்டு எதிரொலிக்கும் கம்பீரமான குரலில் ஜேம்ஸ்..

என் அருமை குழந்தைகளே இந்த உலகை பொருத்தவரையில் இதுவே நமது கடைசி சந்திப்பு நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம் வேறுவழி இல்லை நாம் உயிர் தியாகம் செய்யாவிட்டால், விளைவுகள் விபரீதமாகப் போய்விடும்.

வெளியிலிருந்து நெருங்கி கொண்டிருக்கும் தீய சக்திகள் நம்மை அழிக்க முடிவெடுத்துவிட்டன அவற்றிடம் சிக்கப் போகிறோமா அல்லது இறைவனிடம் சரணடைய போகிறோமா?

நான் உங்கள் மீது வைத்திருக்கும் அதே அன்பு என்னிடமும் உங்களுக்கு இருப்பது உண்மையானால் என்னோடு உயிர் துறக்க தயாராகுங்கள் கவலை வேண்டாம் இது இறைவனின் கட்டளை.

நாளை நாம் அனைவரும் உயிர்த்தெழுவோம் சொர்க்க லோகமான ஒரு புதிய உலகத்தில் நாம் மீண்டும் சந்திப்போம் நாளை நமது பக்தர்களே என்னோடு வருவீர்களா உருக்கமாக ஆவேசமாக ஜிமஜோன்ஸ் கேள்வி எழுப்ப வருவோம் வருவோம் என்று கூட்டம் இடியோசை போல முழங்குகிறது.

அதை தொடர்ந்து..

சயனைடு விஷம் கலக்கப்பட்ட மினரல் தண்ணிர் அடங்கிய பெரிய ட்ரம்களை சிஷ்யர்கள் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.

அதில் லெமன் ஜுஸ் கலக்கப்னட்டது.

இந்த பானத்தை குடித்த சில நிமிடங்களில் நீங்கள் இறந்து விடுவீர்கள் ஆகவே கட்டுப்பாட்டுடன் குடும்பம் குடும்பமாக க்யூ வரிசையில் வந்து பானத்தை பெற்றுக் கொள்ளுங்கள் முதலில் குழந்தைகள் ஒலிப்பெருக்கியில் ஜிம்ஜோன்ஸ் ஆணையிடுகிறார்.

முதலில் குழந்தைகளுக்கு பெற்றோர் விஷக் குடிநீரைப் புகட்டிவிடுகிறார்கள் கைக்குழந்தைகளின் வாயை பிரித்து சிரிஞ்ச் மூலம் நர்ஸ்கள் சயனைடு விஷத்தை பீய்ச்சுகிறார்கள் சில சிறுவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.

சிஷ்ய கோடிகள் பலவந்தமாக அவர்களை பிடித்துக்கொன்டு விஷத்தை குடிக்க வைக்கிறார்கள் மரண பயம் காரணமாக தப்பிக்க பார்க்கும் சிலர் துப்பாக்கி முனையில் குடிக்க வைக்கப்படுகிறார்கள்.

ஒரு வழியாக ஜிம்ஜோனஸின் திருநாமத்தை குரல் நடுங்க உச்சரித்தவாறு அமைதியாகவே அத்தனை பேரும் விஷம் குடிக்க ட்ரம்கள் அகற்றப்படுகின்றன.

சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தள்ளாட ஆரம்பிக்க சிஷ்யர்கள் அவர்களைக் கைதாங்கலாக அழைத்துச் சென்று புல் தரையில் வரிசையாகப் படுக்க வைக்கிறார்கள்.

சிஷ்யர்கள் குவளையில் விஷம் எடுத்து சாவதானமாக குடிக்கிறார்கள். படுத்திருந்த அத்தனை பேரின் உடல்களும் துடிக்கின்றன.

எல்லோருடைய மூக்கு வாய் வழியாக ரத்தம் எட்டி பார்க்கிறது பிறகு மரண அமைதி.

முயற்சி செய்தேன் முடிந்த வரை முயற்சி செய்தேன் என்று உரக்க குரலெழுப்பிய ஜிம்ஜோன்ஸ் வானத்தை அண்ணாந்து பார்த்து அம்மா அம்மா என்று அலறுகிறார்.

மறுவிநாடி டுமீல் என்ற சத்தம் தன் நெற்றிப்பொட்டில் ஜோன்ஸ் வைத்திருந்த கைத்துப்பாக்கி இயங்குகிறது மூளை சிதற சரிந்து விழுந்த ஜோன்ஸ்ன் உயிர் பிரிகிறது.

கவர்ச்சி மிகுந்த ஒருபோலி சாமியார் பக்தகோடிகளை உச்சக்கட்டமாக எந்த அளவுக்கு அடிமைகளாக இயக்க முடியும் என்பதற்கு ஜிம்ஜோன்ஸ் ஓர் உதாரணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.