ஐ.ஐ.டி யில் சமசுகிருத பாடல் பாடியதாக, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடவில்லை என சர்ச்சையை கிளப்பிவிட்டு, ஓசைப்படாமல் 500 ஏக்கரில் நீர்வழி, கடலோர துறைமுக ஆராய்ச்சி மையத்தை துவக்கி இருக்கிறது ப்ராமண பனியா இந்தியம்.
தமிழ்நாட்டில் எந்த மீத்தேன் திட்டமும் இல்லை என சொல்லி தமிழர்களை அமைதி படுத்தி, அதே நேரம் சாகர் மாலா திட்டத்திற்கு இரண்டரை லட்சம் கோடியை தமிழ்நாட்டில் இறக்கியுள்ளது இந்தியம்.
இதன் அடிப்படையில்..
துறைமுக கட்டமைப்பு, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, கடலோர சிறப்பு தொழில் மண்டலம் உருவாக்கப்படும். சென்னை-சேலம் 10 ஆயிரம் கோடியில் 8 வழி சாலை. திருச்சி-கோவை, தஞ்சை - மதுரை, மதுரை - தனுஷ்கோடி (இதில் தனுஷ் கோடி மனிதர் வாழ தகுதியற்ற இடம் என அறிவித்து மக்களை வெளியேற்றியும் விட்டார்கள்) எக்ஸ்பிரஸ் சாலைகள் 50 ஆயிரம் கோடி செலவிலாம்.
தமிழர்களின் எல்லா கோரிக்கையையும் குப்பைத்தொட்டியில் வீசியுள்ள ப்ராமண பனியா இந்தியா ஏன் கேட்காமலே இரண்டரை லட்சம் கோடியை தமிழ்நாட்டில் கொட்டுகிறது? எனில் அதிலிருந்து 25 லட்சம் கோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து என்ன எடுக்க போகிறார்கள்?
தமிழ்நாட்டின் 2000 கிணறுகளில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதும், அது முடிந்தபின் அங்கிருந்து அதைவிட அதிக மதிப்பு வாய்ந்த நிலக்கரி எடுப்பதுமே அன்றி வேறென்ன..
மக்கள் இல்லாத பாலைவனங்களில் செய்யும் திட்டங்களை,
வயலும், நீரும் விவசாயமும் செழிக்கும்
இடங்களில் கொண்டுவந்து,
8 கோடி தமிழர்களின் தாய்நாடான தமிழ்நாட்டை சோமாலியா ஆக்கும் சாகர் மாலா திட்டத்தை பேசாமல் சமசுகிருத பாடலை பேசவைத்து திருப்பியிருக்கிறது பிராமண பனியா இந்தியம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.