நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இந்த சூத்திரத்தை மனதில் கொண்டால் போதும்..
உங்கள் இலக்குகளை அடைவதற்குப் பயன்படும் விதமாக நீங்கள் பார்க்கும் , கேக்கும், படிக்கும் அனுபவங்களிலிருந்து கோட்பாடுகளை , உத்திகளை , முறைகளை கண்டுணர்ந்து தொடர்பு கொண்டு , உள்வாங்கி பிரயோகியுங்கள்..
இதுவே R2A2 சூத்திரம் எனப்படுகிறது..
R2 எனப்படுவது கண்டுணர்ந்து தொடர்பு படுத்திப் பார்ப்பது. (Recognize and Relate ).
A2 எனப்படுவது உள்வாங்கி பிரயோகிப்பதை குறிக்கிறது. (Assimilate and Apply ).
உங்கள் பயனுள்ள இலக்குகளை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு , உங்கள் எண்ணங்களை வழிப்படுத்தி , உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , உங்கள் தலைவிதியை தீர்மானியுங்கள்..
இலக்குகளை மற்றும் அதனை அடையும் வழிகளை முதலில் கண்டுணருங்கள் அவற்றை உங்கள் கனவுடன் தொடர்புபடுத்தி பாருங்கள்..
அவற்றை முழுதாக உள்வாங்குங்கள் அதனை பிரயோகித்து இலக்கினை அடையுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.