1 பசித்த பின் சாப்பிட வேண்டும்.
2 ஜீரணமாகாத வேளையில் அதிகம் சாப்பிட கூடாது.
3 பகலில் அதிகம் தூங்கக் கூடாது.
4 அதிகாலையில் துயில் எழ வேண்டும்.
5 அழுக்கு ஆடைகளை அணியக் கூடாது.
6 காற்றோட்டம் இல்லாத இடத்தில் வசிக்கக் கூடாது.
7 அதிக நேரம் கண் விழித்து இருக்க கூடாது.
8 எப்போதும் ஏதாவது ஒன்றைப்பற்றி அளவு கடந்த சிந்திக்கக் கூடாது. இவற்றின் காரணமாக பல நோய்கள் தோன்றக் கூடும்.
9 படுக்கையை விட்டு எழுந்ததும் சிறிது இஞ்சியை சாப்பிட வேண்டும்.
10 மதிய உணவு முடிந்ததும் சிறிது சுக்கு சாப்பிட வேண்டும்.
11 இரவில் படுக்கச் செல்லும் முன்பு கடுக்காய் சாப்பிட வேண்டும்.
12 அதிகாலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். ஓடுதல், நீந்துதல் ஆகியவையும் நல்ல உடற்பயிற்சியே.
இவற்றை ஒழுங்காக கடைபிடித்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.