03/05/2018

கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் வாழும் மர்ம ஜந்து...


கியூபா நாட்டுக்கு அருகாமையில் பஹமாஸ் ஏனும் நாடு உள்ளது.

சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பஹமாஸ் ஆகும்.

அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கேமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப் பெறவில்லை.

இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

காரணம் கேமராவின் வயர்கள் கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன.

அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா
மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது.

அப்படி என்றால் எந்தவகையான மீன்கள்
இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப் போனார்கள்.

இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து
திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள்.

ஆனால் இம் முறை, அந்த மர்ம ஜந்து
மாட்டிக் கொண்டது.

காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்த போது, அதன்
உருவம் கேமராவில் பதிவாகியது.

அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி
நீளமான இந்தப் புதுவகையான
ஜந்துவையும் அவர்கள் சாமர்த்தியமாகப்
பிடித்து விட்டார்கள்.

அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

7 கால்களைக் கொண்ட இந்த ஜந்து இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும்.

பாத்திநோமஸ் ஜயன்டியஸ் என்று
அழைக்கப்படும் இனத்தில் இதனை
இணைத்துள்ளார்கள். விஞ்ஞானிகள்.

கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில்
வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை
உணர்ந்து அதனை தாக்கியுள்ளது.

இது வசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.