கரிகாலன் கட்டிய கல்லணையில் தொழில்நுட்பம் புரியாமல் ஐரோப்பா அறிஞர்கள் தவித்தார்கள்.
ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் இந்த கல்லணையை பல வருடங்கள் ஆய்விட்டார். அதன் முழுமையை புரிய கொள்ள முடியவில்லை..
Baird Smith, என்ற ஆங்கிலேய பொறியாளர் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை..
எப்படி இது சாத்தியம் ?
பெருக்கெடுத்து ஓடும் நீரில் தடுப்பு அணைகளை எப்படி கட்டி இருக்க முடியும்?
இதற்கு விடை என்ன தெரியுமா ?
மிகவுமே சுலபம்..
நீங்கள் கடற்கரைக்கு சென்று இருப்பீர்கள் தானே.. அங்கே உங்கள் கால்களை கடல் நீரில் வைக்கும் பொழுது கடல் அலைகள் உங்கள் கால்களில் படும்..
அலைகள் மறுபடியும் கடலில் சேரும் பொழுது உங்கள் காலுக்கடியில் ஒரு பள்ளம் உருவாகும் கவனித்தீர்களா ?
இது தான் கல்லணையில் தொழில்நுட்பம்..
அதாவது கனமான ஒரு பொருள் இழுத்து செல்லும் நீரில் படும்பொழுது நீரோட்ட்டம் அந்த இடத்தில தடைபடுகிறது தடைபட்டவுடன் அந்த கனமான ஒரு பொருள் அந்த இடத்தில அழுத்தம் பெறுகிறது..
இந்த சின்ன விஷயத்தை தான் கல்லணை கட்டவும் பயன்படுத்தியுள்ளனர் நம்ம மூதாதையர்கள்..
கல்லணையில் ஓடும் நீரில் கனமான பாறைகளை கொண்டு வந்து போட்டவுடன் நீரின் அழுத்தத்தில் மண்ணில் புதைக்கிறது.
அருகே சிறிது இடைவெளிவிட்டு அடுத்த கனமான பாறைகளை போட்டு கரையாத களிமண்ணில் கட்டிய அணை தான் கல்லணை..
ஆங்கிலேயன் வியந்த இந்த தொழில்நுட்பம் மிகவும் இலகுவான கடற்கரை கால்தடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் எவ்வளவு பெரிய ஆச்சர்யம் அல்லவா ?
இது அமைத்து இருப்பது டெல்டா பகுதிக்கு அருகே தான்..
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை காவேரி டெல்டா பகுதி விவசாயத்தை முன்னுதாரணமாக கொண்ட பகுதி என்று விளங்கவில்லையா ?
இந்த பகுதியில் தான் இப்ப அதி மேதாவிகள் ஹைட்ரொ கார்பனும் மீத்தேன் திட்டமும் வெகு ஜரூராக நடக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள்..
தன் மண்ணை விரும்பும் ஆட்சியாளன்
வந்தால் ஒழிய இதற்கு விடிவு இல்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.