டிசம்பர் 3, 2009 அன்று வேதாரண்யத்திலுள்ள பனையடிகுத்தகை வழியாகச் சென்றுகொண்டிருந்தது தனியார் பள்ளி வேன் ஒன்றில் 20 குழந்தைகள், ஒரு பள்ளி ஆசிரியை மற்றும் க்ளீனர். வேன், டிரைவரின் அலட்சியத்தால் ஒரு குளத்துக்குள் பாய்ந்தது. அதிலிருந்த குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்களே.
ஆபத்தை உணர்ந்த சுகந்தி டீச்சர், கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு தண்ணீருக்குள் தத்தளித்த குழந்தைகளை ஒவ்வொருவராகக் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். 11 குழந்தைகளை க்ளீனரின் உதவியுடன் கரைசேர்த்த சுகந்தி டீச்சரின் உடல் அதற்கு மேல் ஒத்துழைக்க மறுக்க, மற்ற ஒன்பது குழந்தைகளுடன் தானும் தண்ணீருக்கு இரையாகிப் போனார். அவர் இறந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.