10/06/2017

தமிழீழம் வேண்டுமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா...


தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது.

உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.

அவை போலவே தமிழீழம் தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன...

நன்றி - இணையம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.