வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு, மஞ்சள், வெள்ளை, முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.
முள்ளங்கியை மஞ்சள் முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது.
ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.
புற்றுநோய் தடுப்பு...
சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன.
சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன.
சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.
உறுதியான எலும்பு...
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.
பார்வைக்கு பலம்...
தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும்.
லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது.
இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்...
உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது.
சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.
எடை குறைப்பு...
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம்.
குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும்.
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன.
எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.
ஆஸ்துமாவிற்கு நிவாரணம்...
நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன.
தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்.
தோலுக்கு நண்பன்...
பிற நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்த வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும்.
சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.
இரத்த அழுத்தத்திற்கு மருந்து...
நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன.
மேலும் எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.