திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கண்ட காமாட்சி நாயுடு தெலுங்கு பேசும் அனைத்து சாதியினரையும் - தெலுங்குப் பார்ப்பனர் உட்பட - திரட்டித் தமிழ்நாடு தெலுகு சம்மேளனம் அமைத்தார்..
2016 ஏப்ரலில் நடந்த மாநாட்டிற்குச் சென்னையெங்கும் சுவரொட்டிகள் தெலுங்கிலும் மிளிர்ந்தன.
தலைமை கல்வித் தந்தை கெங்குசாமி நாயுடு.
சிறப்புப் பங்கேற்பாளர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, நெப்போலியன், தங்கபாலு.
தமிழகத்தை அரசாளத் திராவிட அடையாளம்.
தங்கள் ஒற்றுமைக்குத் தெலுங்கு அடையாளம்.
பேச்சளவில் மட்டும் இருக்கும் தெலுங்கு பள்ளிகளிலும் வந்தால் அரசியல்படாத சாதாரண இருமொழியாளரும் முழுத் தெலுங்கராகத் தானே ஆவார்?
சித்தூர், திருப்பதி, புத்தூரை தெலுங்கரிடமும்,
கோலார், பெங்களூரு, கொள்ளேகாலைக் கன்னடரிடமும்,
பாலக்காடு, தேவிகுளம், பீர்மேட்டை மலையாளிகளிடமும் இழந்ததைத் தமிழர்கள் மறந்து விட்டனர்.
தமிழகத்தின் உட்பகுதியையும் இழக்க முடிவு செய்துள்ளார்களோ?
அதை பிரித்து கொடுக்க இந்த திராவிட கட்சிகள் துணை நிற்கிறதோ...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.