சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 9 கிலோமீட்டர் நீளமுடைய எரிகல் ஆனது மெக்ஸிக்கோ நாட்டின் யுகாடான் தீபகற்பத்தில் மோதியது. பூமி கிரகத்திற்கு நேர்ந்த அந்த துரதிருஷ்டவசமான நிகழ்வில் இருந்து தான் டைனோசர்கள் இன அழிவானது தொடர்ச்சியான முறையில் அரங்கேறியது.
பூமி கிரகத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த எரிகல் மோதலில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அந்த மோதலில் மிஞ்சிய எரிகல் பாகங்கள் பற்றிய ஆய்வுகள் சாத்தியமில்லாமல் போனது ஏனெனில் மோதல் நிகழ்ந்த இடத்தின் பெரும்பாலான பிராந்தியம் மிகவும் இறுக்கமாக எண்ணெய் தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
இருப்பினும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்கள் மோதல் எரிகல் மோதல் நிகழ்ந்த இடத்தை தோண்டி ஆராய அனுமதி கிடைத்தது அங்கு இருந்து தான் டைனோசர் மீட்டெடுப்பு கதை மீண்டும் பலமாக ஆரம்பமாகிறது.
பூமி கிரகத்தில் விழுந்த அந்த எரிகல் ஆனது சுமார் 180 கிலோமீட்டர் விட்டம் மற்றும் 20 கிலோமீட்டர் ஆழமுள்ள பெரும் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது, அது சிக்சுலப் பள்ளம் (Chicxulub crater) எனப்டுகிறது.
அந்த பள்ளமானது முதல் முறையாக டைனோசர்கள் சார்ந்த ஆய்வுகளுக்காக தோண்டப்பட இருக்கிறது, இது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய படிம கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஏவியன் : கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய தொன்மம் ஆனது ஏவியன் வகை டைனோசர்கள் அதாவது பறவை வகை டைனோசர்களின் பற்றிய பெரிய அளவிலான புரிதல்களை வழங்கியுள்ளது.
எரிகல் மோதலில் பெரும்பாலான டைனோசர்களின் இனம் அழிந்துவிட, தப்பிப்பிழைத்த சில இனங்களின் மூலம் உருவாகிய உயிரினங்கள்தான் தற்போது நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான ஒரு பரிணாம வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதை நன்கு ஆராய்ந்த சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள், கோழிகளை பயன்படுத்தி ஏவியன் வகை டைனோசர்களை மீட்டுக்க முடிவு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து வழக்கமான கோழிகள் மரபணுக்களில் சில எவியன் வகை டைனோசர்கள் போன்ற மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன அதாவது கோழிகளின் கால்களில், டைனோசர்களின் கால் எலும்பு போன்ற ஒன்றை உருவாகியுள்ளனர்.
அதேபோன்று மற்றொரு ஏவியன் வகை டைனோசர் ஆன ப்கயோஸ்டைலியன்ஸ் (Pygostylians) என்ற இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவைகளை ஆராய்ந்து தற்கால பறவையின் கருக்கள் டைனோசர்களை போன்றே இன்னும் நீளமாக வளரும் அறிகுறிகள் கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.
ஐஎச்எச் வகை மரபணு : நீளமான கால்கள் கொண்ட பறக்கும் வகை டைனோசர்கள் இனத்தில் இருந்து உருவான தற்கால பறவைகள் இனத்திற்கு ஏன் கால்கள் குறுகியது என்பது சார்ந்த ஆய்வில் ஐஎச்எச் (IHH) வகை மரபணு மீண்டும் நீளமாக வளர்க்கொடிய தன்மை கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பகரமான ஆய்வு தகவலில் இருந்து கோழிகளின் கால்களை பயன்படுத்தி முதன்முறையாக டைனோசரின் கால்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
இப்படியாக கோழிகளை கொண்டு டைனோசர்கள் மீட்டெடுக்கப்படும் முயற்சியானது ஒன்றும் முதல்முறை நடக்கவில்லை என்பதும், கடந்த ஆண்டு, இதே ஆராய்ச்சியாளர்கள் குழுவானது கோழி கருவில் இருந்து டைனோசர் அலகு போன்ற வடிவமைப்பை உருவாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.