27/01/2019

ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை எப்போதோ அலட்டல் இல்லாமல் கண்டுபிடித்த தமிழன்...


நம் அனைவருக்கும் அரசன் கோச்சடையானை நம்மில் பலருக்கு தெரியும். அந்த அரசன் கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்றும் ஒரு பெயரும் உண்டு. இவர் தான் சோழர்கள், சேரர்கள் மற்றும் ஆந்திரர்கள் என்று இன்றைய தெற்கு பகுதியில் இருந்த அரசுகளை கைப்பற்றி பாண்டிய நாட்டை விரிவு படுத்தியவர்.

சோழர்களை வென்ற ஜடாவர்மன், அவர்களிடம் இருந்த விலை மதிப்பில்லாத செல்வங்களையும் கைப்பற்றினான். கைப்பற்றிய செல்வங்களை எல்லாம் தென்னகத்தில் உள்ள பல கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.

தொண்டை மண்டலத்தில் உள்ள கோயில்களுக்கு எண்ணற்றத் திருப்பணிகள் செய்தார். சிதம்பரம் நடராசர் கோயில், மற்றும் திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவில் இந்த இரண்டு கோவில்களும் தான் ஜடாவர்மனின் திருப்பணிகளில் அதிகம் பலனடைந்த கோயில்கள்.

திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவிலுக்கு “துலாபார தானம் “ அதாவது ஒருவரின் எடைக்கு எடை தங்கம் என்கிற அளவுக்கு தானம் செய்தார்.

ஆனால் ஜடாவர்மன் செய்த தானம் சற்று விசித்திரமானது, ஒரு மனிதனின் எடைக்கு எடை தானம் தருவதை விடுத்து. இவர் தனது நாட்டில் இருக்கும் ஒரு யானைக்கு மேல் அம்பாரி வைத்து அந்த அம்பாரியில் தானும் தனது அரசியும் முழு கவசத்துடன் சேர்ந்து அமர்ந்துகொண்டான், இவர்களுடன் யானை பாகனும் முன் அமர்ந்து கொண்டான் இந்த மொத்த எடைக்கு எடை தங்கத்தை திருவரங்கம் கோயிலுக்கு தானம்  வழங்கினார்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஒரு யானையை ஒரு தாராசில் ஏற்றி அதன் எடைக்கு எடை நிகர் நிற்க கூடிய தாரசை செய்திருக்க முடியுமா! பிறகு எப்படி இதை இவர்கள் செய்தார்கள் என்று கேள்வி எழுகிறாதா?

சரி அதை எப்படி செய்தார்கள், இதற்கும் இந்த கட்டுரையின் தலைபிற்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போமா...

ஜடாவர்மன், இதை செய்ய முதலில் காவிரிக் கரையாரில் ஒரு குள மண்டபத்தை கட்டினான். அந்த மண்டபத்திற்கு அருகில் ஒரு தெப்பம் நீரில் மிதக்கும் பலகையை கட்டினான். அந்த தெப்பத்தின் மேல் அம்பாறி பூட்டப்பட்ட யானையும் அதன் மீது அரசனும் அரசியும் மற்றும் பாகனும் ஏறினர். இப்போது அந்த தெப்பம் இந்த மொத கனத்தையும் தாங்கி சிறிதளவு நீரில் அமிழ்ந்தது.

அதன் பிறகு யானையை இறக்கிவிட்டு அதற்கு ஈடாக தங்கங்களை வைத்தனர். இது அந்த யானை தெப்பத்தில் இருந்த போது எவ்வளவு உள்ளே தெப்பம் அமிழ்ந்ததோ அவ்வளவு உள்ளே அமிழும் வரை தொடர்ந்தது. இப்படியாக அந்த “துலாபார தானம்” நடந்தது.

இப்போது சொல்லுங்கள், ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை முதன் முதலில் கண்டவனும் செய்து காட்டியவனும் நமது முன்னோர்கள் தானே.

தமிழ் என்பதும் தமிழன் என்பது ஒரு மொழி மற்றும்  அது சார்ந்த இனத்தின் அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு இயங்கியல், அறிவியல் என்று உரக்கச் சொல்லுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.