கைகுத்தல் அரிசிக்கு மாறினால் கவலை இல்லை...
கைகுத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின்-பி குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் நிறைய உள்ளன. இதுதான் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின். ஆனால், தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீட்டப்பட்ட அரிசியில் ஒரு சத்தும் கிடையாது, கிட்டதட்ட சக்கைதான்.
இன்னொரு நுட்பமான விசயம், அரிசியாக இருந்தாலும் சரி, வேறு எந்த தானியமாக... இருந்தாலும் சரி, அது தீட்டப்பட்டதென்றால் அதைச் சாப்பிடுபவர்களின் உடலில் அதிக கால்சியம் சேராது.
இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு, இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. தீட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பெரிய பட்டியலே உள்ளது.
சர்க்கரை வியாதி, உயர் பதற்றம் (Hyper Tension) , எலும்பு தொடர்பான நோய்கள் என பலவும் வரும்.
கைக்குத்தல் அரிசியில் நார்சத்து அதிகம் இருப்பதால், நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
இந்த அரிசி சாதத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே சாப்பிட முடியும். அதாவது, இப்போது நாம் எடுத்துக் கொள்ளும் தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவே போதுமானது.
வயிறு நிறைந்துவிடும். இதனால்தான் அந்தக் காலத்து கிராமத்து ஆட்கள் நோய், நொடியில்லாமல் நலமோடு வாழ்ந்தனர். நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லையே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.